சந்தேகிக்கும்படி🤔 யாரேனும் இருந்தால் உடனடியாக 📲தகவல் கொடுக்குமாறு 👮காவலர்கள் வேண்டுகோள்🙏 - Agnipuratchi

சந்தேகிக்கும்படி🤔 யாரேனும் இருந்தால் உடனடியாக 📲தகவல் கொடுக்குமாறு 👮காவலர்கள் வேண்டுகோள்🙏

Share This

🏝இலங்கையில் 💣குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 👥6 பேர் இலங்கை வழியே 🏛தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக தமிழக 👮டிஜிபி திரிபாதிக்கு 🏛மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் 💪பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, 🏛தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் 🏛கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது😯. கோவை முழுவதும் 👮போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் 👤ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம்😳 என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி🗣 உள்ளது. பயங்கரவாதிகள் என சந்தேகப்படும்🤔 நபர்களின் 📸புகைப்படங்களை 🏛கோவை 👮போலீசார் வெளியிட்டு உள்ளனர். சந்தேகம்படும்படி, யாரேனும் இருந்தால் உடனடியாக உதவி எண் 📲100-ஐ அழைத்து தகவல் கொடுக்குமாறும், 📸புகைப்படத்தில் உள்ள நபரை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் 👥பொதுமக்களுக்கு 👮காவல் உயர் அதிகாரிகள் 🙏வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages