மறைந்த முன்னாள் 🏛மத்திய அமைச்சர் 👴அருண் ஜேட்லிக்கு பல்வேறு கட்சி 👥தலைவர்களுக்கு இரங்கல்😟  - Agnipuratchi

மறைந்த முன்னாள் 🏛மத்திய அமைச்சர் 👴அருண் ஜேட்லிக்கு பல்வேறு கட்சி 👥தலைவர்களுக்கு இரங்கல்😟 

Share This

மறைந்த முன்னாள் 🏛மத்திய அமைச்சர் 👴அருண் ஜேட்லிக்கு பல்வேறு கட்சி 👥தலைவர்களுக்கு இரங்கல்😟 
 
🤒உடல்நலக்குறைவால் 🤵அருண் ஜெட்லி 💉சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 🏥டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்😟. இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மருத்துவர் இராமதாசு. உள்ளிட்ட பல்வேறு கட்சி 👥தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து🔈 வருகின்றனர்😯. அதன்படி, 

👳பிரதமர் மோடி : அருண் ஜெட்லி ஜி ஒரு சிறந்த அரசியல்வாதி, உயர்ந்த அறிவார்ந்த மற்றும் சட்ட நுணுக்கம் அறிந்தவர், அவர் இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராக இருந்தார். அவர் காலமானது மிகவும் வருத்தமளிக்கிறது😟. 

💺ஆளுநர் பன்வாரிலால் புரோகித் : மறைந்த அருண் ஜேட்லியின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக, ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 
உள்துறை அமைச்சர் 👴அமித்ஷா : அருண் ஜேட்லியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார். 

தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர் என புகழாரம் சூட்டினார். ஜேட்லியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, கட்சி தொண்டருக்கும், நாட்டிற்கும் பேரிழப்பு 

மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல் செய்தியில்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர் சங்கத்தில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அருண் ஜேட்லி, பின்னாளில் அதன் தேசியத் தலைவராக உயர்ந்தார். நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட அவர் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் முக்கியத் தலைவராக திகழ்ந்தார். நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஜனசங்கத்திலும், அந்த அமைப்பு பின்னர் பாரதிய ஜனதாவாக மாற்றப்பட்ட போது அக்கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி ஆகியோரின் நன்மதிப்பை பெற்றிருந்த அவர், வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார்.

இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர்களில் ஒருவராகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  மூத்த நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்டார். சிறுநீரகக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நலம் தேறி வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அருண்ஜேட்லியின் மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்லையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்கிறேன்.

மேற்குவங்க 💺முதல்வர் மம்தா பானர்ஜி : மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரும், சிறந்த வழக்கறிஞருமான ஜேட்லி, அனைத்து கட்சிகளிடமும் பாராட்டை பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 

🌞திமுக தலைவர் ஸ்டாலின் : அருண் ஜேட்லி செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பன்முகத்திறமை கொண்ட பண்பாளரும், பாராளுமன்றவாதியுமான ஜேட்லி மறைவெய்தியது பாஜகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு
 
தேமுதிக தலைவர் ⭐விஜயகாந்த் : மிகச்சிறந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உருவாக்கி மக்களை முன்னேற்ற பாதைக்கு அழத்து சென்றவர் அருண் ஜேட்லி. அவரது மறைவு கட்சிக்கும், ஆட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages