⛰சபரிமலை ஐயப்பன் 🏯கோயிலில் நாளை நடை திறப்பு👍 - Agnipuratchi

⛰சபரிமலை ஐயப்பன் 🏯கோயிலில் நாளை நடை திறப்பு👍

Share This

⛰சபரிமலை ஐயப்பன் கோயிலில் 📆ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம்😯. நாட்டில் வறட்சி நீங்கி🚫 விவசாயம்🌾 செழிக்கவும், 🏘வீடுகளில் 💸செல்வம் கொழிக்கவும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் நிறை புத்தரிசி பூஜை 📆7ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 📆6ம் தேதி ⌚மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நாளை காலை 5.45 முதல் 6.15 மணிக்கு இடையே நிறை புத்தரிசி பூஜை💐 நடக்கிறது. பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும்🙂. இந்த நெற்கதிர்களை 🏡வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். வழக்கமான பூஜைகளுக்குபின் பிற்பகல் ⌚1 மணிக்கு நடை சாத்தப்படுகிறது😯. பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு 🔥தீபாராதனை, படிபூஜை, புஷ்பாபிஷேகம் நடக்கிறது👍. இரவு ⌚10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்😐. மீண்டும் 📆ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 📆16ம் தேதி மாலை நடை திறக்கப்படும்👍 என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages