1. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவரது மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு இரங்கல்.
2. சுஷ்மா சுவராஜ் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சர், 27 வயதில் ஹரியானா மாநில ஜனதா தலைவர், 41 வயதில் மத்திய அமைச்சர், தில்லி முதலமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் குறைந்த வயதில் மறைந்தது சோகம் தான். உளமார்ந்த அஞ்சலி.
No comments:
Post a Comment