2020 மார்ச் மாதம் மெகா ஷாப்பிங் 🎊ஃபெஸ்டிவல் நடத்தப்படும்👍-நிர்மலா சீதாராமன்🎙 - Agnipuratchi

2020 மார்ச் மாதம் மெகா ஷாப்பிங் 🎊ஃபெஸ்டிவல் நடத்தப்படும்👍-நிர்மலா சீதாராமன்🎙

Share This

💸பொருளாதார சூழல் குறித்து டெல்லியில் 🏛மத்திய 💸நிதி மந்திரி 👩நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "💸தொழில்துறைக்கு அதிக கடன்களை வழங்க பொதுத்துறை 🏦வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது🗣. ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது😐. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதி பொருட்கள் மீதான 💸கட்டணங்களை நீக்க🚫 புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது😯. வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான⏫ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறைந்தளவு வரி செலுத்துவோர் செய்யும் சிறிய தவறுகளுக்காக தண்டிக்கப்பட மாட்டார்கள். 🏦ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்கும். 🇮🇳நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன👀. தொழில் நடைமுறைகளை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்👍" என்று தெரிவித்த அவர்🎙, "ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது😦. ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 📆2020 ஜன.,1 ல் துவங்கப்படும்🎉. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. 📆2020 மார்ச் மாதம் நாட்டின் 4 இடங்களில் 🏬மெகா ஷாப்பிங் ஃபெஸ்டிவல்🎊 நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages