21. தண்ணீர் சிக்கல் - மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல் - Agnipuratchi

21. தண்ணீர் சிக்கல் - மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்

Share This

தண்ணீர் ஒரு அரிய வளம். அதனை மனிதர்களால் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. பூமி உருவானபோது இருந்த அதே அளவு தண்ணீர் தான் இப்போதும் இருக்கிறது. பூமிப்பந்தின் 70% இடம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் 97.5% உப்பு நீராகும். வெறும் 2.5% மட்டுமே நன்னீர். அதிலும் கூட மனிதர்கள் அடையக்கூடிய அளவில் இருக்கும் நீரின் அளவு வெறும் 1% மட்டுமே. அவற்றிலும் பெரும்பகுதி துருவங்களிலும் மலைகளிலும் பனிப்பாறையாக உள்ளது. அதனை மனிதர்கள் பயன்படுத்த இயலாது. மீதமுள்ள வெறும் 0.007% அளவு நீர் மட்டுமே மனித தேவைக்காக கிடைக்கும் நீர்வளம் ஆகும்!

தமிழ்நாட்டில் தண்ணீர் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 6% மக்களை கொண்டுள்ள தமிழ்நாடு, 4% அளவு நிலப்பரப்பையும், வெறும் 2% அளவு நீர்வளத்தையும் கொண்டுள்ளது. கங்கை நதியில் ஒரே ஒரு நாள் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை விட, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஆறுகள், ஏரிகள், குளங்களின் நீர்வளம் குறைவானது ஆகும்.

தமிழ்நாட்டில் 17 ஆற்று வடிநிலப்பகுதிகள், 61 நீர்த்தேக்கங்கள், 42000 ஏரிகள் உள்ளன. ஆனாலும், இந்தியாவின் தனிநபர் சராசரி நீர்வளமான 2200 கன மீட்டர் நீரை ஒப்பிடும் போது, தமிழக மக்களின் தனிநபர் சராசரி அளவு வெறும் 900 கன மீட்டர் மட்டுமே. எனவே, ஒவ்வொரு துளி நீரையும் சேமித்து, அதனை மாசுபடுத்தாமல் தடுத்து, முறையாக பயன்படுத்தும் தேவை தமிழ்நாட்டுக்கு உள்ளது.

சென்னை நகரின் நீர் மேலாண்மை குறைபாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பேராபத்தாக உருவெடுக்கும். சென்னை நகரின் மிக முதன்மையான நீர் ஆதாரமாக இருப்பது நிலத்தடி நீர்தான். ஆனால், 2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் சென்னை நகரில் நிலத்தடி நீர் கிடைக்காது என மத்திய அரசின் நித்தி ஆயோக் அறிவித்துள்ளது. அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அடுத்து வரும் பகுதிகளில் விளக்குகிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages