நகர்ப்புற பசுமைப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், ஏரிகள், குளங்கள், கோயில் குளங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் மிக மிக முதன்மையான தேவை ஆகும். காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்ளுதல், கரியமிலவாயுவை குறைத்தல், மக்களின் உடல்நலம், பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு தேவைகள் என அனைத்துக்கும் இவை இன்றியமையாதவை.
எனவே, பசுமைப் பகுதிகள், நீர்நிலைகள், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், பொது இடங்கள், விளையாட்டு திடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாப்பதற்கான முழுமையான கொள்கைகளை (City Public Space Policy - City Biodiversity Action Plan), உருவாக்கி, முழு அளவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment