மேலும், புதிய தமிழ்நாடு மாநில காலநிலை செயல்திட்டத்தை (Revised – Tamil Nadu State Action Plan on Climate Change), காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) உள்ளடக்கிய வகையில் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மாநில காலநிலை செயல்திட்டம் 2015 ஆம் ஆண்டில் ஏற்கப்பட்டது. ஆனால், அது போதுமானதாக இல்லை. காலநிலை சிக்கலுக்கு தீர்வுகாணும் வகையில் இல்லை. எனவே, தமிழ்நாடு மாநில புதிய காலநிலை செயல்திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் மரபுசார எரிசக்தியின் பங்களிப்பை 40% ஆக உயர்த்துவது மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் கரியமிலவாயு வெளியாகும் அளவை (emission reduction intensity per GDP) 33% - 35% குறைப்பது என்பன போன்ற நோக்கங்கள் இந்த புதிய செயல்திட்டத்தில் இடம்பெறலாம்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு காலநிலை அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டு, அதற்கேற்ற வகையில் மேற்கண்ட திட்டங்களையும் ஆலோசனைகளையும் உள்ளடக்கி, தமிழ்நாடு மாநில புதிய காலநிலை செயல்திட்டத்தை (Revised – Tamil Nadu State Action Plan on Climate Change) வெளியிட வேண்டும்.
No comments:
Post a Comment