"உங்கள் கிராமத்தில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை செயலாக்க முன்வாருங்கள்!" மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி வேண்டுகோல். - Agnipuratchi

"உங்கள் கிராமத்தில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை செயலாக்க முன்வாருங்கள்!" மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி வேண்டுகோல்.

Share This

புவிவெப்படைவதால் ஏற்படும் ஆபத்துகள் தமிழ்நாட்டை மோசமாக பாதிக்கும். குறிப்பாக கிராமப்பகுதிகள் பாதிப்படையும். இந்த பேராபத்திலிருந்து ஒவ்வொரு கிராமமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அந்த நோக்கில் உங்களது கிராமத்தில் காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்தவும், அதற்கான செயல்திட்டத்தை செயலாக்கவும் பசுமைத் தாயகத்துடன் இணைந்து செயல்பட அழைக்கிறேன்.

---------------
நிங்கள் என்ன செய்ய வேண்டும்?
---------------

1. உங்களது கிராமத்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி காலநிலை அவசரநிலை பிரகடனத்தை வெளியிடுவதற்காக, கீழே முதல் பின்னூட்டத்தில் உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்.

2. உங்கள் கிராமத்தின் கிராமசபை கூட்டத்தில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை (Climate Emergency Declaration) வெளியிட நீங்கள் முயலவேண்டும்.

3. அதன் பின்னர், உங்கள் கிராமத்துக்கான காலநிலை செயல்திட்டத்தை (Climate Action Plan) உருவாக்க நீங்கள் முயல வேண்டும்.

- மேற்கண்ட பணிகளுக்கான வழிமுறைகளை பசுமைத் தாயகம் உங்களுக்கு அளிக்கும்.

எனவே, உங்கள் கிராமத்தில் காலநிலை அவசநிலை பிரகடனத்தை செயலாக்க முன்வாருங்கள். கீழே முதல் பின்னூட்டத்தில் (First Comment) உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்:

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages