மாவீரன் குரு'-வின் கடைசி ஆசை பா.ம.க ஆள வேண்டும் என்பதே - அன்புமணி இராமதாஸ். - Agnipuratchi

மாவீரன் குரு'-வின் கடைசி ஆசை பா.ம.க ஆள வேண்டும் என்பதே - அன்புமணி இராமதாஸ்.

Share This

தியாகிகளின்தினமான 17.09.2019 இன்று மாவீரன் குருவின் மணிமண்டபம் மருத்துவர் இராமதாசு அய்யா திறந்து வைத்தார் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி முன்னாள் பா.ம.க தலைவர் தீரன். பா.ம.க மாநில பொது செயலாளர் வடிவேல்ராவணன் பா.ம.க பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க நிர்வாகிகள் பு. த. அருள்மொழி க. வைத்தி சிறப்புறை வழங்கினர்கள்.

பிறகு பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நம் மக்களின் எண்ணிக்கை நமக்கு பலம், நம்மிடையே ஒற்றுமையின்மை நமது பலவீனம்.

தமிழகத்தை யார் யாரோ ஆண்டார்கள். நான் கேட்பது, தமிழகத்தை நாங்களும் ஆள வேண்டும் என்பதே

பிற சமுதாய தலைவர்கள், தான் சார்ந்த சமுதாயத்திலுள்ள மற்ற தலைவர்களை பற்றி ஒருபோதும் விமர்சிப்பதில்லை. ஆனால், நாம் சார்ந்த சமூகத்தினர் மரு.அய்யாவை பற்றி சிலர் சுயநலத்திற்காக விமர்சிக்கின்றர்.

வன்னியர்கள் முன்னேறாமல், தமிழகம் முன்னேற முடியாது.
அய்யாவை எதிர்த்து, பாமகவை எதிர்த்து யார், யாரெல்லாம் பதிவு எழுதுகிறார்களோ? அவர்கள் இந்த சமுதாயத்தின் துரோகிகள்.

தமிழகத்திலுள்ள அத்துனை வன்னியர்களும், மரு.இராமதாஸ் தலைமையின் பின்னால் வாருங்கள்
மருத்துவர் இராமதாசு அய்யாவிடம் மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்த வேண்டும் என்று வேண்டுகோல் விடுத்தார்.

இறுதியாக பேசிய - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா முதலில்
பூம்புகாரில் 'வன்னியர் சங்க மகளிர் மாநாடு' விரைவில் நடத்த உள்ளோம் 

இதனை தொடர்ந்து விரைவிலேய வன்னியர் சங்க மாநாடும் நடத்தப்படும். சுவர் விளம்பரம், பேனர்கள் போன்றவற்றை பாமக நிகழ்வுகளில் வைக்க கூடாது.

அன்புமணிக்கு நாளுக்கு நாள் தமிழகத்தில் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், இணையத்தில் என்னைப்பற்றி பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிடுபவர்கள்  பொறம்போக்கு, ஈனப்பிறவிகள் - காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை திறந்து வைத்து கடுமையாக பேசினார். இன்நிகழ்சியில் பா.ம.க வன்னியர் சங்க சமூக முன்னேற்ற சங்க அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோ கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages