கனிமொழிக்கு எதிராக😡 தொடுத்த வழக்கினை வாபஸ்🤔 பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை🗣 - Agnipuratchi

கனிமொழிக்கு எதிராக😡 தொடுத்த வழக்கினை வாபஸ்🤔 பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை🗣

Share This

🏛தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழியை 😡எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்🎉. இந்த 🗳தேர்தலில் 🌞திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார்🎉. கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது தெலுங்கானா 💺ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் 📜மனு தாக்கல் செய்து இருந்தார். கனிமொழியின் 📜வேட்பு மனுவில் குளறுபடிகள் இருந்ததாகவும் அதனை சுட்டிக்காட்டிய👉 பின்னரும் கூட 🗳தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை🚫 என்று தனது மனுவில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை🗣 நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்📣. ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று தமிழிசை தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனையடுத்து, இந்த மனு குறித்து கருத்து🗣 தெரிவிக்க ஏதுவாக, உரிய 📄நோட்டீசை அரசிதழில்📰 வெளியிட, உத்தரவிட்ட⚖ சென்னை உயர்நீதிமன்றம், மனு மீதான விசாரணையை 📆அக்டோபர் 14க்கு தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages