தமிழகத்தில் 🖥கணினி ஆசிரியர் ✍தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்❓ - Agnipuratchi

தமிழகத்தில் 🖥கணினி ஆசிரியர் ✍தேர்வை தமிழில் நடத்தாதது ஏன்❓

Share This

தமிழகத்தில் அரசு 🏫பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் 📣அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழிக்கல்வி பயின்றோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என 🎙தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட ✍தேர்வை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 🖥கணினி ஆசிரியருக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய ⚖நீதிபதி, வருகின்ற 6ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ✍உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages