பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு 🏔காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்😱 - Agnipuratchi

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு 🏔காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்😱

Share This

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு 🏔காஷ்மீரின் மிர்பூர் நகரின் அருகே கடந்த 📆24ம் தேதி மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம், 🏛பஞ்சாப் மற்றும் 🏛கைபர் பக்துன்கவா மாகாணங்களில் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டது😦. இதில் பல பகுதிகளில் 🏘வீடுகள் இடிந்து தரைமட்டமாகின😟. இப்பகுதியில் கடந்த 📆14 ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் இது. இதில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது⏫. அதிக சேதத்தை சந்தித்த 🏛ஜட்லான் பகுதியில் 11 பேரும், மிர்பூரில் 9 பேரும் இறந்துள்ளனர்😰. இந்நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் 4. 4 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது😱. இதனால் அதிர்ச்சியடைந்த 👥மக்கள் 🏘வீடுகளை விட்டு பதற்றத்தோடு😨 வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்😐. லாகூர், இஸ்லாமாபாத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. முந்தைய நிலநடுக்கத்தில் ஏற்கெனவே விரிசலாகி பலவீனமான 🏪கட்டிடங்களில் தற்போதைய நிலநடுக்கம் இடிபாடுகளை ஏற்படுத்தியது😳. அதில் சிக்கியவர்களை மீட்குப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages