10, 11, 12ம் வகுப்பு ✍பொதுத் தேர்வு ⌚நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது🔈 - Agnipuratchi

10, 11, 12ம் வகுப்பு ✍பொதுத் தேர்வு ⌚நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது🔈

Share This

🏫10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 📆2019-2020ம் கல்வியாண்டில் புதிய 📚பாடத்திட்டத்தின் படி ✍பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே ⌚3 மணி நேரமாக இருந்த ✍தேர்வு நேரம், சில ஆண்டுகளுக்கு முன் ⌚இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது⏬. ஆனால் நடப்பு 📚கல்வியாண்டில் முழுவதும் புதிய பாடத்திட்டத்தின் படி ✍பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், தேர்வு எழுதும் ⌚கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் 🙏கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த 🙏கோரிக்கையை ஏற்று ✍தேர்வு எழுதும் நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி 🏫பள்ளிக்கல்வித்துறை அரசாணை📜 வெளியிட்டுள்ளது🎉. இதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் 🏫11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 500 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் 🏫10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ⌚3 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages