ஸ்ரீதேவி என்பவர் வண்ணாரப்பேட்டை, 🏛சிங்காரத்தோட்டத்தில் உள்ள அனைத்து 👩மகளிர் காவல்நிலையத்தில் காவல் 👮ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 📆4 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு புற்றுநோய் பாதிப்பு😨 இருப்பது தெரியவந்த நிலையில், தொடர்ந்து 💉சிகிச்சை எடுக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்😟. இது குறித்து, தகவலறிந்து சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் சக காவலர்கள், ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி🙏 செலுத்தினர். பின்னர் நல்லடக்கத்திற்காக 👩ஸ்ரீதேவியின் உடல் எடுக்கப்பட்டது. அப்போது, துணை ஆணையர் சுப்புலட்சுமி தனது சக பெண் காவலர்களுடன் மயானம் வரை சுமந்து சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் 💻சமூக வலைதளங்களில் பரவி வருகிறது😐. இந்நிலையில், துணை ஆணையர் 👩சுப்புலட்சுமி இது குறித்து கூறுகையில்🎙, "ஸ்ரீதேவி இறந்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்று 💐அஞ்சலி செலுத்தினேன். திடீரென தோன்றியதால் சக காவலர்களுடன் சேர்ந்து அவரது உடலை தூக்கிச் சென்றேன்😳. இறந்தது ஒரு ஆய்வாளராக இல்லாமல் 👮காவலராக இருந்தால் கூட நான் இதைத்தான் செய்திருப்பேன்😯" என்று கூறியுள்ளார்.
🏛சென்னையில் காலமான 👩பெண் 👮ஆய்வாளர் உடலை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்😐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment