🏛நாங்குநேரி 🗳இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் 🙏கோரிய 📜மனு தள்ளுபடி⚖ - Agnipuratchi

🏛நாங்குநேரி 🗳இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் 🙏கோரிய 📜மனு தள்ளுபடி⚖

Share This

🏛தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும், 🏛புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் 📆வரும் 21ம் தேதி 🗳இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 🏛நாங்குநேரி தொகுதியில் 💸பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் அங்கு 🗳தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமென, சுயேட்சை வேட்பாளர் 👤சங்கர சுப்பிரமணியன் என்பவர், 🏛உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் 📜மனுத்தாக்கல் செய்தார். இந்த 📜மனுவை விசாரித்த🗣 நீதிபதிகள் 🤵சிவஞானம்-🤵தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, 🗳தேர்தல் 📆தேதியை அறிவித்த🗣 பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது🚫 என தெரிவித்தது. 🗳தேர்தலின் போது ஏற்படும் அசாதாரண விஷயங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்👍 எனக்கூறி, 📜மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages