அனைத்து 🏢கல்லூரிகளும் ✍நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க முடிவு😯 - Agnipuratchi

அனைத்து 🏢கல்லூரிகளும் ✍நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க முடிவு😯

Share This

⏫உயர் 📚கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை 🏛மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மத்திய அரசின் 💸நிதியுதவி பெறும் கல்லூரிகள் மட்டுமே தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார குழுமத்தின் அனுமதி பெறுவது தற்போது வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது😐. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான 🏢கல்லூரிகள் நாக் ✍அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன😳. இதனை மாற்றுவதற்காக அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது😯. இந்த நிலையில் புதிய திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய 👥குழு தற்போது வெளியிட்டுள்ளது😐. அதில் அனைத்து கல்லூரிகளும் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக👍 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அது தவிர நிரந்தர 🤝இணைப்பு மட்டுமல்லாமல், தற்காலிக இணைப்பு பெற்று இயங்கும் 🏢கல்லூரிகளும் யுஜிசி வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இதை தொடர்ந்து, 👀ஆய்வின் போது குறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது மாணவர்கள் சேர்க்கைக்கு தடை🚫 உள்ளிட்ட 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages