ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலை மையப்படுத்தியே அரசியல் செய்துகொண்டிருக்கின்ற நிலையில், இயற்கை மீதும், எதிர்கால தலைமுறையின் நல்வாழ்வை கருத்தில் கொண்டும் செயல்பட்டுவரும் வித்தியாசமான அரசியல் கட்சியாகவே பாமக வை பார்க்க முடிகிறது.
அதாவது
1)இயற்கையை இயற்கையாக பயன்படுத்த வேண்டும் என்பதே பாமக வின் செயல்பாடாக தெரிகிறது.
அதாவது மரபணு மாற்ற பயிர்களை பாமக விரும்புவதில்லை. மண்ணை மலடாக்கும் கெமிக்கல் உரங்களை பாமக தவிர்க்கவே சொல்கிறது.
2)தொடர்ச்சியான இயற்கை அழிப்புகளால் பூமியில் பல்வேறு பேரழிவு மாற்றங்கள் உருவாகியுள்ளதை பாமக பதைபதைப்புடனே உற்றுநோக்குகிறது. நகர வளர்ச்சிக்காக காடுகள் அழிக்கப்படுவதை பாமக விரும்புவதில்லை. ஒரு மரம் வெட்டப்பட்ட இடம் சுற்றி 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். ஆபத்தான கரியமில வாயுக்களால் ஓசோன் படலம் சிதைவுற்று, புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குவதால், மனிதனுக்கு மட்டுமல்ல என்னற்ற தாவரங்களும், சிறு உயிரினங்களும் அழிகின்ற பேரழிவு போக்கினை தடுக்க வேண்டுமென பாமக சற்று அதிகமாகவே மெனக்கெடுகிறது.
3) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்திற்கு காடுகள் பற்றாக்குறையே காரணம். மனித நாகரிக வளர்ச்சியில் மனித பேராசையால், காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. இதனால் பூமியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிச்சயம் ஏற்படும். எதிர்கால தலைமுறை நல்ல காற்றிற்காக ஏங்கும் சூழலும் உருவாகும். எதிர்கால தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்தாக இயற்கையை இயற்கையாக அவர்களுக்கு விட்டுச் செல்லவேண்டும் என பாமக அக்கறை கொள்கிறது.
4)மனித உடல்நலனில் பாமக மிகுந்த அக்கறை கொள்கிறது. போதை பாக்குகள், புகையிலை பொருட்கள், மது போன்றவை மனித உயிருக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியவை. அவை அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது பாமக. இதை பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் மட்டும் 500 ஆண்டுகளா வாழப்போகிறோம் என்பவர்களுக்கு இருக்கின்ற காலத்தில் நோயின் பிடியில் சிக்கி அவதியுற வேண்டாமே, நலமோடு வாழ்ந்து மறைவோமே என்று அறிவுறுத்துகிறது பாமக.
இறுதியாக பாமக என்கிற பாட்டாளி மக்கள் கட்சி மற்ற கட்சிகளில் இருந்து வித்தியாசப்பட்டு, மனிதர்களை தேர்தல் நேர வாக்காளர்களாக பார்க்காமல், மண்ணின் மைந்தர்களாக கருதி அவர்களின் உடல்நலத்திலும், சுற்றுபுற சூழலிலும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டாலும், திராவிட மாயையில் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களுக்கு நல்லதொரு அரசியல் கட்சியாக தெரியாதது துரதிர்ஷ்டமே.
வழக்குரைஞர் V.S.கோபு இணை ஆசிரியர், அக்னிப்புரட்சி மாத இதழ்.
No comments:
Post a Comment