அயோத்தி தீர்ப்பால் நம்பிக்கை; மன்கிபாத்தில் மோடி பேச்சு. - Agnipuratchi

அயோத்தி தீர்ப்பால் நம்பிக்கை; மன்கிபாத்தில் மோடி பேச்சு.

Share This

ரேடியோ வாயிலாக பிரதமரின் மன்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார்._ _அதில் மோடி பேசியதாவது: ஆயுதப்படைகளின் கொடி தினமான டிச.,7ம் தேதி, அனைவரும் கொண்டாட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். சிபிஎஸ்இ., பள்ளிகளில் 'பிட் இந்தியா வீக்' என்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு, யோகா, நடனம் என்பது போன்ற பல உடற்பயிற்சிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வினை அனைத்து பள்ளிகளும் டிசம்பரில் கொண்டாட வேண்டுகோள் விடுக்கிறேன். அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, நாட்டில் நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒழுக்கங்கள் எல்லாவற்றிற்கும் மேலானது. இவ்வாறு மோடி பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages