📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 டிசம்பர் - 13 வெள்ளி 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சிகை - தலைமயிர்
➖➖➖➖➖➖➖➖➖➖
குழந்தைகள் ஆபாச வீடியோ - சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஐபி அட்ரஸ்களை வைத்து போலீசார் ரகசிய விசாரணை
பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் ஏன்? அச்சிடப்பட்டது சர்ச்சையான நிலையில் அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் போரிஸ் ஜான்சனுக்கு சாதகமாக வெளிவந்துள்ளன.
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பி.எஸ்.என்.எல்-ன் நிதி நிலைமை சீரடைந்ததும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நிறைவு
பட்டியல் இனத்தினர், பழங்குடியினருக்கான தனித்தொகுதி இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
விழுப்புரத்தில் தங்களது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தந்தையும் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு
முன்னதாக 3 நாள் பயணமாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் இந்தியா வரவிருந்தார்.
ஊழியர்களுக்கு ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் அமெரிக்க நிறுவனம் அசத்தல்
குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக சென்னையில் போலீஸ் ரகசிய விசாரணை
கனடாவில் விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு
காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காலை முதல் பலத்த மழை
பட்டாசுக்கு தடை கோரும் வழக்கு ‘தர நிர்ணய மையம் அமைக்க தயார்’ தொழிற்சாலைகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசு தகவல்
நாட்டுக்கு பயன் அளிக்கும் கடின முடிவுகள் எடுப்பதை காங். எப்போதுமே தவிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் உள்ளதா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் 9 மொழிகளில் மொழி பெயர்ப்பு
நாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது
அசாமில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் : ஜப்பான் பிரதமர் இந்திய வருகை ரத்து?
முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக் கைது
‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி
தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது
காவல் நிலையங்களின் மின்சப்ளையை துண்டித்த பஞ்சாப் மின்சார வாரியம்
குடியுரிமை திருத்த மசோதாவால் இலங்கை அகதிகளுக்கு பிரச்சினை இல்லை எச்.ராஜா பேட்டி
பிரிட்டன் பொதுத்தேர்தலில் பின்னடைவு- எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கார்பின் ராஜினாமா
‘தொடரை கைப்பற்றியது திருமண நாள் பரிசு’ இந்திய கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி
‘கியாஸ்’ கொண்டு வருபவருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்- இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு
சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு - தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி
கான்பூர்:உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த, காது கேளாத, வாய் பேசமுடியாத, 19 வயதுப் பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த, சஞ்சய் கவுதம் என்ற நபர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
காடுகளில் சுற்றி திரியும் போட்டோகிராபராக ஆண்ட்ரியா!
சென்னை: டில்லி காற்று மாசுக்கு தீர்வு காண பஞ்சாபில் வைக்கோலை எரித்து அனல் மின் நிலையம் துவங்க தனியார் நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய அரசில் பதவி ஏற்ற, மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு சிவசேனாவுக்கு உள்துறை; தேசியவாத காங்கிரசுக்கு நிதி
புதிய வடிவம் பெறும் சபரிமலை; மாஸ்டர் பிளான் திட்டத்துக்கு அங்கீகாரம்
சரத்பவாருக்கு 79-வது பிறந்தநாள் - உத்தவ் தாக்கரே வாழ்த்து
சாத்துார்: ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டி விவகாரத்தில் நியாயம் கேட்க சென்ற வங்கி ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட அராஜகம் விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
கட்சியில் இருந்து விலக போவதாக வதந்தி: பா.ஜனதா ஒரு சிலரின் கைகளில் செல்ல விட மாட்டேன் - பங்கஜா முண்டே பரபரப்பு பேச்சு
புதுடில்லி: அசாமில் நடக்கும் வன்முறை காரணமாக, இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே, வரும், 15 - 17 தேதிகளில், அங்கு நடக்க திட்டமிட்டிருந்த மாநாடு, டில்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தானே அருகே சிறுமியை கொன்று உடல் காட்டுப்பகுதியில் வீச்சு: உறவுக்கார பெண் உள்பட - 2 பேர் கைது
புதுடில்லி: திவால் சட்ட திருத்த மசோதாவை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற - சித்தராமையா மறுப்பு
புதுடில்லி: 'சில குறிப்பிட்ட பழைய அலைபேசிகளில் பிப்ரவரி 2020 முதல் 'வாட்ஸ் ஆப்' செயலியை பயன்படுத்த முடியாது' என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற முயற்சி செய்யவில்லை - முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
சென்னை: 'விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு ஆவணம் இல்லையென்றால் வாகனத்தை விடுவிக்கக் கூடாது; தேவைப்பட்டால் வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம்' என அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில், வீடுகளில் திருடி வந்த ஒடிசாவை சேர்ந்த பிரபல திருடர்கள் 4 பேர் கைது - ரூ.64 லட்சம் தங்க நகைகள் மீட்பு
கவுகாத்தி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, பார்லி.,யில் நிறைவேறியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நேற்றும் நடந்தன. வடகிழக்கு மாநிலங்களில் நேற்று நடந்த நிகழ்வுகள்:
காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது
புதுடில்லி: ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது.
திருபுவனை அருகே போலீசாரை தாக்கிய ரவுடி ஜனா கூட்டாளிகள் - 2 பேர் கைது
புதுடில்லி : சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய், கொழுப்புசத்து அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் என அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பஸதட்டுள்ளதாக பா.ஜ., எம்.பி., பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரெட்டியார்பாளையம் - மேட்டுப்பாளையம் சாலையில் 57 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தாஹா: அண்டை நாடான வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, 74. ஊழல் வழக்கில், 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இவர், தாஹாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொம்பாக்கம் பகுதியில், திடீரென ரேஷன்கடைகளில் - இலவச அரிசி வினியோகம்
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு
No comments:
Post a Comment