📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 டிசம்பர் - 16 திங்கள் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 டிசம்பர் - 16 திங்கள் 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 டிசம்பர் - 16  திங்கள் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சிங்கம் - அரிமா
➖➖➖➖➖➖➖➖➖➖

டெல்லி :ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை : ஜன. 5 வரை கல்லூரி மூடல்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

புதுடில்லி: நாட்டையே உலுக்கிய டில்லி மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் முடியும் நிலையில், இந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்குமா என, அவர்களுடைய குடும்பத்தார் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, 4 அரசு பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில், ஐயப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கினர்.

ஜார்கண்டில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அவர், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வன்முறையை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டினார்.

சண்டிகர்: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. காலை 7 மணிக்கு இதற்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

குடியுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம்: மேகாலயா முதல்-மந்திரிக்கு அமித் ஷா வாக்குறுதி

லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடந்த போட்டியில் கரீபிய நாடான ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன் சிங் 23, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருடைய தந்தை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை:துபாய், இலங்கை மற்றும் கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட, 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

மடிப்பாக்கம்:மாநகர பேருந்து மோதி, டூ - வீலரில் சென்ற தாய், மகள் பலியாகினர்.

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குடும்பத்துடன் அதிபர் உயிர் தப்பினார்

ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம் (பென்சன்) வழங்க ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

2 மணி நேரத்தில் 123 பதிவுகள்: டுவிட்டரில் சாதனை படைத்த டிரம்ப்

2 வாரங்களாக நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு முடிவடைந்தது

அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து - சீனா அறிவிப்பு

ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க 31-ந் தேதி கடைசி நாள் - வருமான வரித்துறை அறிவிப்பு

கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

காரைக்குடி அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு

ஜனவரி 15-ந் தேதி கடைசி நாள் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டண முறைக்கு அவகாசம் நீட்டிப்பு

பள்ளியில் பேனாவுக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்தது: 8ம் வகுப்பு மாணவியை இரும்பு தடியால் 19 முறை அடித்து கொன்ற 10 வயது சிறுமி: ராஜஸ்தானில் பயங்கரம்

ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் மர்மச்சாவு: கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

திருப்பதியில் நாளை முதல் சுப்ரபாதம் சேவை ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு

அரக்கோணத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை - பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வெறிச்செயல்

மோடி-ஜின்பிங் இடையே நடந்த மாமல்லபுரம் சந்திப்பு பலன்கள் தெரிகின்றன: சீன தூதர் பேட்டி

கீழ்க்கட்டளை அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தாய்-மகள் உடல் நசுங்கி பலி

ஓசூர், சூளகிரியில் 65 யானைகள் அட்டகாசம் வீடுகளில் முடங்கிப்போன விவசாயிகள்: வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கோரிக்கை

‘ஒரு ஓட்டின் விலை பன்றியின் விலையை விட குறைவு’ - சுவரொட்டியால் பரபரப்பு

காவல் நிலையங்களில் எப்ஐஆர் போட்டும் இறுதி தகவலறிக்கை தாக்கல் செய்யப்படாத லட்சம் வழக்குகள்: ஐகோர்ட் நீதிபதி தகவல்

மதுரவாயலில் தலையில் கல்லை போட்டு நண்பர் கொலை - கட்டிட தொழிலாளி கைது

நாகர்கோவிலில் இந்து முறைப்படி நடந்தது அமெரிக்க மணமகனுக்கு இந்திய மணமகளுடன் திருமணம்

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா

சென்னை தியாகராயர் நகர் எலைட் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழ்க்கில் மேலும் ஒருவர் கைது

நாக்பூரில் 6 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர்; பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது

தற்போதைய செய்திகள்
ஜாமியா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது? பல்கலைக்கழக வளாகம் வெளியே பரபரப்பு!

வீர சாவர்க்கர் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்

இலவச மடிக்கணினிகளைப் பெற இன்று கடைசி: கல்வித்துறை

முதல்-மந்திரியின் மாதோஸ்ரீ் இல்லம் முன்பு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘ஆண்டி ரேப் கன்’ - தொட்டால் சுட்டும் 

புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், நகரில் முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மும்பை: 'மன்னிப்பு கேட்க நான் ராகுல் சாவர்க்கர் இல்லை' என கூறிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக, வீர சாவர்க்கரின் பேரன், ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் - சித்தராமையா வீடு திரும்பினார்

புதுடில்லி: 'நாடு முழுவதும் நடந்து வரும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி 2020 மார்ச்சில் முடிவடையும்' என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெங்காய விலை உயர்வால் அதிர்ஷ்டம்: ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய - சித்ரதுர்கா விவசாயி

புதுடில்லி: நாட்டின் எல்லைப் பகுதியிலும், மலை பிரதேசங்களில் கடுமையான சூழலில் பணியாற்றும் தங்களுடைய படையைச் சேர்ந்தவர்கள், தகுந்த ஜோடியை தேர்ந்தெடுக்க உதவும் வகையில், திருமண வரன் பார்க்கும் வசதியை, ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை வழங்குகிறது.

பெங்களூருவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்: கழுத்தை அறுத்து கார் டிரைவர் கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களிடம் வெற்றிலை மீது சத்தியம் வாங்கி, ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

தம்பதியிடம் நகை, பணம் மோசடி: கன்னட இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட 3 பேர் தலைமறைவு - கைது செய்ய போலீசார் தீவிரம்

நியூயார்க்: 'பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியில், மத சிறுபான்மையினரின் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என, ஐ.நா., அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம்: மத்திய அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம் - பெங்களூருவில் நடந்தது

சென்னை:மாநகராட்சியில், திடக்கழிவுகளில் இருந்து பெறப்படும் மறுபயன்பாடுள்ள பொருட்களை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும், இணையதள சேவை துவக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி வருகையையொட்டி: புதுச்சேரி விமான நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.65காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவ

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages