அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்ற போராட்டத்தில் வன்முறை. வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என மாணவர்கள் மறுப்பு.

*போலீஸ் - மாணவர்கள் இடையே நடந்த மோதலை அடுத்து ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு 5ஆம் தேதி வரை விடுமுறை.
மாணவர்கள் போராட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக ஜாமியா பல்கலைக்கழகம் ஜனவரி 5ஆம் தேதி வரை மூடப்பட்டதால் விடுதியில் இருந்து வெளியேறும் மாணவர்கள்.

*டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும். அமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்.

*சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தாய் சுதா(25) மற்றும் மகள் ஷிவானி(3) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி; பேருந்து ஓட்டுநர் கைது!

*நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம்.
- உத்தவ் தாக்கரே.

*டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை. மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு.

*பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு:
டெல்லியில் ஓக்கலா, ஜாமியா, நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, மதன்பூர் காதர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

*ராமநாதபுரம்: இலங்கை வழியாக தங்கம், கஞ்சா கடத்தும் கும்பலை சேர்ந்த 3 பேர் சுற்றி வளைத்து கைது.
கடத்தல் கும்பலிடம் இருந்து 66 சவரன் நகைகள், ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தது காவல்துறை. கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் பலரை எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான போலீஸ் தேடி வருகிறது.

*கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - மாநில தேர்தல் ஆணையம்

*இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.

முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்து வெற்றி.

*ஸ்ரீவில்லிபுத்தூர் : மார்கழி முதல் தேதியான நாளை ஒருநாள் மட்டும் சதுரகிரி கோவிலுக்கு செல்ல வனத்துறை சிறப்பு அனுமதி.

*குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தற்கு அதிமுக எம்பி பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது.
தலைமைச்செயலக துணை செயலரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைகுனிவு - ப.சிதம்பரம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages