மழையினால் கோவை நடூர் கிராமத்தில் உயிரிழ்ந்த 17 பேருக்கும் மேலும் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்த 7 பேருக்கும் ஆழ்ந்த இரங்கல் அனுதாபம் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துக்கொண்டார். - Agnipuratchi

மழையினால் கோவை நடூர் கிராமத்தில் உயிரிழ்ந்த 17 பேருக்கும் மேலும் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்த 7 பேருக்கும் ஆழ்ந்த இரங்கல் அனுதாபம் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துக்கொண்டார்.

Share This

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நடூர் கிராமத்தில் மழையினால் வீடுகள் இடிந்து   குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இதே போல் மழையினால் வேறு இடங்களிலும் 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.                

உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.                  

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 இலட்சம் வீதம் அரசு வழங்க வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு அரசு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.              

வீடுகள் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் அரசு மீட்பு  நடவடிக்கைகளையும் நிவாரண உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages