📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 டிசம்பர் - 17 செவ்வாய் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 டிசம்பர் - 17 செவ்வாய் 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 டிசம்பர் - 17 செவ்வாய் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சிங்காரம் - ஒப்பனை; அழகு
➖➖➖➖➖➖➖➖➖➖

மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுடில்லி: ஜனநாயகத்தில் அனைத்து மக்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. என டில்லியில் நடந்த ஒரு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

கடலுார் : உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அரசியல் கட்சியினர் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடலுாரில் குவிந்தனர்.

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுடன் பிரதமர் மோடியின் சகோதரர் சந்தித்து, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றம் குறித்து பேசினார். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இளைய சகோதரரும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருபவருமான பிரகலாத் மோடி நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராடியவர்கள் மீது போலீ சார் தடியடி நடத்தியதை கண்டித்து, நாடு முழுவதும் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில், துறை பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 'வணிகத்தில் பகுப்பாய்ந்து போட்டியில் மேலாதிக்கம் செலுத்துவது' குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், மேலாண்மை துறை கூட்ட அரங்கில் நடந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. கடைசி நாளான நேற்று மனு தாக்கல் களை கட்டியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

விருத்தாசலம் சபரி அய்யப்ப சுவாமி கோவிலில், சக்தி பூஜை விழாவில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

மெரினாவில் 900 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி தகவல்

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்து உள்ளார்.

பெண்ணாடம் அருகே நாச்சியார் அம்மன் கோவிலில், வெண்கல பொருட்களை திருடிய மர்ம நபர்களை, கிராம மக்கள் துரத்தி பிடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலியில் 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு - 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்

புதுடில்லி: 'பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வன்முறையையும், பிரித்தாளும் அரசியலையும் கையாளுகிறது. சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறது' என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை

சென்னை: இன்று மார்கழி மாத பிறப்பையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலையில் பலரும் ஆர்வமுடன் பஜனைக்கு சென்றனர். கோயில்களை சுற்றிய 4 வீதிகளிலும் ராமா, ராமா கோஷங்கள் கேட்க முடிந்தது.

வங்காளதேசத்தில் மின் விசிறி தொழிற்சாலையில் தீ விபத்து - 10 பேர் உடல் கருகி பலி

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில், 225 பேர், கை, கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்ற காரணம் குறித்து, அவர்களை கைது செய்த, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்களிடம், விசாரணை நடந்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: சூப்பர் மார்க்கெட் இடிந்து 6 பேர் சாவு

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பா.ஜ.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் சென்கார் 53, குற்றவாளி என நீதி
மன்றம் அறிவித்துள்ளது. தண்டனை குறித்த வாதங்கள் நாளை துவங்குகிறது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் - 7 பெண்கள் உள்பட 22 பேர் பலி

சென்னை: ''என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது'' என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை

'பேசாத வார்த்தைகளை ராகுல் பேசியதாக கூறி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சபைக்கு பொய்யான தகவலை அளித்துள்ளார்' என, காங்கிரஸ், லோக்சபா செயகத்தில், உரிமை மீறல், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளது.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடைபெற்ற போலீஸ் தடியடி பற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு - இன்று விசாரணை நடைபெறுகிறது

சென்னை : கலெக்டர் அலுவலகத்தில், தாசில்தார்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 'காவலன்' செயலி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குடியுரிமை சட்டத்தை உறுதியாக அமல்படுத்தமாட்டோம் - மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி

மின்சார சேமிப்பில் சிறந்து விளங்கியதற்காக, மின்னணு துறை பிரிவில் தெற்கு ரெயில்வே 3 விருதுகளை பெற்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து: தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

உன்னாவ் எஸ்பி அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிப்பு- கற்பழிப்பு குற்றவாளி முன்ஜாமீன் பெற்றதால் ஆத்திரம்

திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் வி‌‌ஷம் குடித்த புதுப்பெண் - கோவில்பட்டி அருகே பரபரப்பு

தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தேனி அருகே, ‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவி

குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது: கே.எஸ்.அழகிரி

சேலத்தில் 28 ஆண்டுகளாக வசிக்கிறேன் இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் என்னை கருணை கொலை செய்யுங்கள் - கலெக்டர் அலுவலகத்தில் இலங்கை அகதி மனு

நாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த நீதிபதிகள் குழு நியமனம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி நம்பர் ஒன் இடத்தில் தொடருகிறார்

‘மேக் இன் இந்தியா’ வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது - விமானப்படை தளபதி சொல்கிறார்

‘தவறாக நடந்த பலரை கன்னத்தில் அறைந்தேன்’ நடிகை ராணி முகர்ஜி கூறுகிறார்

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்: கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்யானந்தா பேச்சு

சத்ரபதி சிவாஜி நினைவு சின்ன திட்டத்தில் ஊழல்: விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு

ஆப்பிரிக்காவில் 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்குக் கப்பல் கடத்தல்: நைஜீரிய அரசுடன் இணைந்து, ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட இந்தியா முடிவு

பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கு : ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் மீது குற்றப்பத்திரிகை

மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

மேல்-சபையில் பா.ஜனதா கடும் அமளி; சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் பரவுகிறது: தமிழகம் உட்பட பல மாநிலத்தில் மாணவர்கள் கொந்தளிப்பு,.. டெல்லியில் தொடர்ந்து பதற்றம்,..பிரியங்கா திடீர் தர்ணா

மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு சாதகமான பதில் ; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக குற்றப்பின்னணி உடைய 10 பேர் கைது

நமது நாட்டில் 40 சதவீத உணவு தானியங்கள் வீணாகின்றன; முதல்-மந்திரி எடியூரப்பா கவலை

திப்ரூகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 8 மணி வரை தளர்ப்பு

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் நானும் உள்ளேன்; கே.எச்.முனியப்பா சொல்கிறார்

நக்சல்கள் ஆதிக்கத்தை 20 அடி ஆழ குழியில் புதைத்தவர் மோடி : பிரசாரத்தில் அமித்ஷா புகழாரம்

ஆண்களை விட பெண்கள் அதிகம்: புதுச்சேரி மாவட்டத்தில் 8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - கலெக்டர் தகவல்

காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை

அதிகாரிகள் மீது அதிருப்தி: புதுவை அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து - பாதியில் முடிந்ததால் பரபரப்பு

கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்று வருவதால் பொள்ளாட்சியிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு

சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீடு ரூ.380 கோடியை மத்திய அரசு தரவில்லை - நாராயணசாமி புகார்

சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.58 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages