அக்னிச் புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிச் புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிச் புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்.

*சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது.

*கச்சத்தீவு கடல்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த‌து  இலங்கை கடற்படை.

*கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த‌தாக புகார் - திமுக எம்.எல்.ஏ. சேகர் பாபு மீது சென்னை யானை கவுனி காவல்நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு.

*திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக போராட்டம்: காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

*குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய் மனு.

*குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு. நாளை விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages