📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 டிசம்பர் - 22 ஞாயிறு 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 டிசம்பர் - 22 ஞாயிறு 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 டிசம்பர் - 22 ஞாயிறு  🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சிகிச்சை - மருத்துவம்
➖➖➖➖➖➖➖➖➖➖

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தணிகிறது: வட மாநிலங்களில் அமைதி திரும்புகிறது

கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை-திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்

திருவள்ளூர் அருகே பயங்கரம்: வெடிகுண்டு வீசி 2 ரவுடிகள் படுகொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்

பாஜக எம்பி கெளதம் காம்பீருக்குகொலை மிரட்டல்: போலீஸில் புகாா்

கோவில்பாளையம் காலிங்கராயன் குளத்தில் சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசனுக்கு விருது: தகுதி அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமனம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

புதிய தொழில்நுட்பங்களுடன் துணை மின்நிலையங்கள் நவீன மயமாகிறது: தமிழக மின்சாரவாரியம் திட்டம்

கடந்த 6 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடி ஆய்வு

ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருதுக்கு ஜன. 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: அறிவியல் நகரம் அறிவிப்பு

போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறை - பா.ஜனதா அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் இடத்தை பிடிக்க போட்டி: குண்டு வீசி 2 ரவுடிகள் கொலை: திருவள்ளூரில் பயங்கரம்: எஸ்.பி. தலைமையில் 4 தனிப்படை அமைப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி மாதம் சிறப்பு முகாம்கள் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்ட தடை: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கோதாவரி-காவேரி நதிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 300 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும்: கல்லணைக்குப் பதிலாக கட்டளை கதவணையில் இணைக்க வேண்டும்...தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு தமிழக அரசு கடிதம்

1.4 லட்சம் கோடி டாலர் செலவினத்துக்கு டிரம்ப் ஒப்புதல்: அமெரிக்காவில் மத்திய அரசு அலுவலகங்கள் மூடல் தவிர்ப்பு

சிறைத்துறை டிஐஜி விளக்கம்: சிறை நிர்வாகம் மீது முருகன் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை

உள்நாட்டு போருக்கு மத்தியில் சிரியாவில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் - 3 அரசு எண்ணெய் ஆலைகள் சேதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 3 ரயில்வே ஸ்டேஷன்களில் ரோபோடிக் பாடி மசாஜ் சேர்: வட மாநிலத்தவர்கள் ஆர்வம்

சீனாவில் ஆற்றில் ரெயில் கவிழ்ந்து 4 பேர் பலி

ஆபாச படம் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை: கூடுதல் டி.ஜி.பி. பேட்டி

ஜிம்பாப்வே நாட்டில் சாலை விபத்தில் 11 பேர் சாவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் செல்வராஜ் மரணம்

அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விவரம் குறித்த பட்டியல் வெளியீடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஜனவரி முதல் விசாரணை - உச்சநீதிமன்றம் அறிவிப்பு

காலிமனைகள் மீது வரி விதிப்பு சென்னை மாநகராட்சி நடவடிக்கை

2016ல் ஜார்கண்ட் மாநிலத்தில் பொறியியல் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்

மதுரை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் பரிதாபம்: தந்தை இறந்த தகவலை அறிந்ததும் மாணவர் தற்கொலை

பீம் ஆர்மி இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமின் அளிக்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

வாலாஜாபாத்தில், பாம்புடன் அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது - வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் உ.பி வன்முறை பலி 15 ஆக உயர்வு: 8 வயது சிறுவன் பலியான பரிதாபம்

வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது

சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும், கார்த்தியின் தம்பி படமும் ரிலீசான சில மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

ஐதராபாத் என்கவுண்டர்- 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி: சென்னையில் நடக்கிறது

திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது

அழியாத கோலங்கள்-2 படத்தில் நடித்தது பெருமை; அர்ச்சனா, ரேவதி மகிழ்ச்சி

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மராட்டியத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி; உத்தவ் தாக்கரே அறிவிப்பு

ஜி.எஸ்.டி. வரி உயருமா? - மந்திரிகள் குழு அமைப்பாளர் விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி.யை சந்திக்க மறுத்த மத்திய மந்திரி - புதிய சர்ச்சை

மாநகராட்சிகளில் வார்டுக்கு 4 கவுன்சிலர்களை தேர்வு செய்யும் முறையை ஒழிக்கும் மசோதா; சட்டசபையில் நிறைவேறியது

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து கழக பெண் நடத்துனர் மீது (டிச.,19) அன்று 2 பேர் ஆசிட் வீசினர். இந்த தாக்குதலில் அந்த பெண் முகத்தில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த விசாரணையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவன் அந்த பெண்ணின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

மும்பை :குப்பை தொட்டியில் டம்ளர்களை கழுவிய ரெயில்வே கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

புதுடில்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து டில்லி இந்தியா கேட் பகுதியில் சோனியா மகள் பிரியங்கா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மும்பை-செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரெயில்; மத்திய ரெயில்வே அறிவிப்பு

மும்பை : பஞ்சாப் வங்கியில், 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்த நிரவ் மோடி, தன் நிறுவனத்தின் இயக்குனரும், தொழில் அதிபருமான அனீஷ் மோகன்பாய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மங்களூருவில் நடைபெற்ற வன்முறை,துப்பாக்கி சூடு குறித்து விசாரணை; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

வாஷிங்டன் : மகாத்மா காந்தி, மார்டின் லுாதர் கிங் ஜூனியர் ஆகியோரின் புகழை பரப்புவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கக்கோரி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை; சித்தராமையா கருத்து

மறைந்த நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவராய் இருந்தவருமான அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, 1999லிருந்து, 2012 வரை பணியாற்றி உள்ளார். இந்த காலகட்டத்தில், சங்கத்தில் பல ஊழல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி உள்ளிட்ட சிலர், ஜெட்லி மீது குற்றஞ்சாட்டினர்.

மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? எடியூரப்பா விளக்கம்

பரோட்டா சுட்டு ஓட்டு கேட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்.. புதுக்கோட்டையில் களேபரம்!

புதுடில்லி: கடந்த, மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் பரிதாபமான தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். இப்போதைக்கு சோனியா, இடைக்கால தலைவராக உள்ளார். நிரந்தர தலைவரை நியமிக்க, கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

வடமாநிலங்கள் பசுவின் பேரில் நடந்த கொலைகளை பற்றி பேசாத ரஜினி இப்போது பேசுவது ஏன்?.. தமிமுன் அன்சாரி

மங்களூருவில் வன்முறை எதிரொலி: காங். முன்னாள் மந்திரி மீது தேசத்துரோக வழக்கு

சென்னை:ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, முறையாக பதிவு செய்யாமல் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்திய தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுவை மக்களுக்கு எதிராக உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது நாராயணசாமி வேதனை

என்னா கோவம்.. ஆவேசம்.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக கராத்தே தியாகராஜன்.. உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ச்சல்

சென்னை:பொது மக்கள், தங்களிடம் உள்ள, வரலாற்றுச் சிறப்புமிக்க பழம்பொருட்களை ஒப்படைக்கும் படி, தொல்லியல் அலுவலர் வலியுறுத்தி உள்ளார்.

புதுவை அரசின் நியமனம் ரத்து: மாநில தேர்தல் ஆணையரை கவர்னரே இறுதி செய்வார்

வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்துக்கு, விரைவில் திட்ட அனுமதி வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்விரைவுபடுத்திஉள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, வண்டலுாரில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டம் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற எதிர்கட்சிகள் வதந்தியை பரப்புகிறார்கள் இல.கணேசன் பேட்டி

சென்னை:கே.கே.நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், 14ம் தேதி ஆட்டோவில் பயணித்தார். அப்போது, விலை உயர்ந்த ஐ - போனை, ஆட்டோவில் தவற விட்டார். பின், உடனடியாக கே.கே.நகர், போலீசில் புகார் அளித்தார்.

“ஒடுக்குமுறை இருக்கும் வரை போராட்டம் இருக்கும்” - வைரமுத்து

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறும்வரை போராடுவோம் நாராயணசாமி உறுதி

சென்னை கடற்கரை -- தாம்பரம் உட்பட, அனைத்து புறநகர் மின்சார ரயில்களிலும், சுற்றுலா பயண சீட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், கடற்கரை -- தாம்பரம் உட்பட, ஐந்து வழித்தடங்களில், புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன

ஜனாதிபதி நாளை வருகை: புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.58 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages