📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 டிசம்பர் - 23 திங்கள் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சித்தாந்தம் - கோட்பாடு
➖➖➖➖➖➖➖➖➖➖
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சென்னையில் இன்று பேரணி
“என்னுடைய உருவபொம்மையை வேண்டுமானால் எரியுங்கள். ஆனால் பொது சொத்துகளை சேதப்படுத்தாதீர்கள்” என்று, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடம் கட்டிய விவகாரம்: விதிமீறல் இருப்பின் நடவடிக்கை எடுத்து 1 மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தேர்தல் நேரத்தில் வழக்கு தொடுத்து காலவிரயம் செய்கிறார்கள்: பொருட்காட்சி திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பிறகு அதிகார போட்டியில் தொடரும் கொலைகள்: பொதுமக்கள் பீதி
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது மாலைக்குள் தெரிந்து விடும்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலி மனை மீதான வரி செலுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை
தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியை வீடியோ படம் எடுக்க உத்தரவிட்டுள்ள ஐகோர்ட்டு, அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்களே பொறுப்பு என்று கூறி உள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி பேரணி: 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
மன்மோகன்சிங் பற்றிய மோடி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
வேலூர் சிறையில் 2வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் 62 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஜன.4ம் தேதிக்கு பின் பொங்கல் பரிசு: அமைச்சர் காமராஜ் பேட்டி
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் 8 வயது சிறுமி ஆவேச பேச்சு வைரலாக பரவுவதால் பரபரப்பு: நாங்க ஒன்னா சேந்தோம்... தாங்க மாட்டீங்க...
பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர், ராணுவத்துடன் திடீர் ஆலோசனை
காஷ்மீர் கிராமங்கள் மீது பாக். ராணுவம் தாக்குதல்
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 6 பேர் பலி
டிஷா கொலையாளிகள் சடலங்களுக்கு மறு பிரேத பரிசோதனை நடத்த டாக்டர் குழு அமைத்தது எய்ம்ஸ்
சூரிய கிரகணம், மண்டல பூஜையால் சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
அமெரிக்கா வருமாறு போரிஸ் ஜான்சனுக்கு, டிரம்ப் அழைப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 10ம் நாளாக தொடர்கிறது போராட்டங்கள்: ராஜஸ்தானில் 3 லட்சம் பேர் பேரணி
அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல்
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்குக்கு எடைக்கு எடை அரிசி
நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை ஒருவர் சிக்கினார் - 3 பேருக்கு வலைவீச்சு
திருப்பதி ஏழுமலையான் கோயில் சூரிய கிரகணத்தை ஒட்டி மூடப்படும் .....தேவஸ்தானம் அறிவிப்பு
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் - சிவனடியார்கள் கோரிக்கை
பணமதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா குவித்த சொத்து பட்டியல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த எலி, அணில், நாய் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை
குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என வங்கதேசம் அறிவிப்பு
திருச்சி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
3000 ரெயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐ.சி.எப். சாதனை: ரெயில்வே மந்திரி பெருமிதம்
ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார், ரோகித் சர்மா
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை தினத்தில் பார்வசதி கொண்ட ஓட்டல்களை அதிகாலை 5 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்படுவதாக கலால்துறை சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.
பிக்பாஷ் கிரிக்கெட்டில் கிறிஸ் லின் சிக்சர் மழை
குரோம்பேட்டை: பல்லாவரத்தில், 30 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அகற்றும் பணிகள் துவங்கியுள்ளன. ஓராண்டில், இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்து கடவுளை அவமதித்ததாக - சர்ச்சையில் சிக்கிய சல்மான்கான்
பம்மல்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பம்மல், எம்.ஜி.ஆர்., பிரதான சாலையில், கழிவுகள் அகற்றப்பட்டு, ஊழியர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ - படக்குழுவினர் அதிர்ச்சி
திருப்பதி: தெலுங்கானாவில், மோதிரத்தை விழுங்கி, உயிருக்கு போராடிய, 5 மாத குழந்தையை, மருத்துவர்கள் காப்பாற்றினர்.
‘குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு
சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல சுழற்சியால், சில இடங்களில் இன்று(டிச.,23) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சிகரெட் வாங்கி தர கூறியவரை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டு ஜெயில் - தானே கோர்ட்டு தீர்ப்பு
'தமிழகத்தில் பி.எட்., தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெறுவோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) 0.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் பள்ளி கல்வி போல் கல்வியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்' என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மங்களூருவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
புதுடில்லி: 'குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு நாங்கள் காரணமல்ல. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம்' என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேச்சை உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் - காங்கிரஸ் புறக்கணிப்பு
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவிலுள்ள சர்ச் ஒன்றில் 34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எடியூரப்பாவுக்கு மனிதநேயம் இருக்கிறதா? துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை சிறையில் தள்ள வேண்டும் - குமாரசாமி ஆவேசம்
ஐரோப்பியாவில் உள்ள பிரிட்டன் நாட்டில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான, 'கன்சர்வேடிவ்' கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது, எண்ணற்ற கேள்விகளை உலக அளவில் எழுப்பியுள்ளது.
ஜனவரியில் மந்திரிசபை விரிவாக்கம் - எடியூரப்பா தகவல்
கோவை:கல்லுாரி மாணவர்கள் நாள்தோறும், 150 முறைக்கு மேல், தங்களது மொபைல்போன்களை எடுத்து பார்க்கும் பழக்கத்துக்கு, ஆளாகி இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏற்படும் வீண் பதட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, மீட்பு மையங்கள் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அதிர்ச்சி அளிக்கின்றனர்.
கோலார் தங்கவயலில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னம் - தொல்லியல் துறையினர் கண்டுபிடித்ததாக சமூக ஆர்வலர் தகவல்
திருப்பூர்:ஊரக உள்ளாட்சி முதல் கட்ட தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், விடுமுறை தினமான நேற்று, வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கூட்டணி கூட்டத்தில் முடிவு: புதுச்சேரியில் 27-ந்தேதி ‘பந்த்’ முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
கோவை:சார்ஜாவில் இருந்து, கோவை வந்த விமானத்தில், நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட, 7 கிலோ தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி : ஜனாதிபதி இன்று வருகை: புதுவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை:''குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மை நிலை தெரியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போராடுகிறார்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
தவளக்குப்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது கூட்டாளிக்கு வலைவீச்சு
சென்னை:தமிழக அரசின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'பிங்க்' நிற, புத்தக பை வழங்கும் பணி துவங்கி உள்ளது.
காமராஜர் மணிமண்டபம் மார்ச் மாதம் திறக்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
சென்னையில் இன்று (டிச.,23) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.58 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.77 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment