அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்
*சென்னையில் பெட்ரோல் 8 வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.82 ஆகவும் உள்ளது.
*பம்பையில் கட்டுக்கடங்காத கூட்டம் : பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்தியா முழுவதில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது.
இதனால், நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து மலையேறும் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பகுதியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால், ஐயப்பனை தரிசிக்க 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
*குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பிரமாண்ட பேரணி...!
வாக்கு வங்கி அரசியலுக்காகவே காங்கிரஸ் போராடுவதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு...!
*“பாலியல் புகார் கூற வேண்டும் என்றால் 2002ம் ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறுங்கள்!”சத்சங்கம் உரையில் நித்தியானந்தா விடுத்த சவால்...!
*குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை திருப்பி அனுப்பிய சென்னை ஐஐடி
சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்து, ஜெர்மனிக்கு இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசை விமர்சித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*சீர்காழி அருகே வேன் கவிழ்ந்து விபத்து : அறுபடை வீடு சுற்றுலா சென்ற பக்தர்கள் 12 பேர் காயம்
நாகபட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சென்னை மணலியில் இருந்து அறுபடை வீடு சுற்றுலா சென்ற வேன் கோவில்பத்து நான்கு பிரிவு புறச்சாலையில் விபத்துக்குள்ளானது. பேருந்தில் மோதமால் தவிர்க்க முயன்ற போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் கழுமலை ஆற்றில் வேன் கவிழ்ந்தது.
*கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த நாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டும்.
அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment