📰 நாளிதழ் செய்திகள்📰    🗓 டிசம்பர் - 27 வெள்ளி  🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰    🗓 டிசம்பர் - 27 வெள்ளி  🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 டிசம்பர் - 27 வெள்ளி  🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சிலை - படிமம்
➖➖➖➖➖➖➖➖➖➖

உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கஜகஸ்தான் நாட்டில் 100 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

லக்னோ : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உ.பி.,யில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 21 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

இந்தியாவிலேயே மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை: சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மண்டல பூஜை இன்று(டிச.,27) நடக்க இருப்பதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

காந்தி நாடு ஹிட்லர் பாதையில் செல்கிறது என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் பா.சிதம்பரம் எம்.பி.பேசினார்.

புதுடில்லி: 'தான் மாணவராக இருந்த போது, நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதாக பிரதமர் மோடி கூறினாரே, அதுவும் தவறா?' என ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு, ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.

சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்தார்.

தேனி:ஆழ்துளை கிணறுகளில் சிக்கி குழந்தைகள் இறப்பதை தடுக்க வலியுறுத்தி பைக்கில் பயணித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., சிவாஜி 65.

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இதில் 372 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

ஈரோடு : கோபிச்செட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.

நீர்வளத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் புதிய திட்டத்தில் தமிழகத்தை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

பாலம்பங்: தென்கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், மூன்று தினங்களுக்கு முன், நதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மேலும் ஏழு பேரின் உடல்கள், கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை, எட்டு குழந்தைகள் உட்பட, 35ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்சை தாக்கிய புயல் 16 பேர் பலி

அண்ணா சாலை : மெட்ரொ ரயில் நிர்வாகமும், காவல் துறையினரும், 'சிக்னல்' அமைப்பதில், சிக்கல் ஏற்படுத்தி வருவதால், அண்ணாசாலையில் சிக்னல் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து : 7 பேர் பலி

இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மை பாகிஸ்தான் செல்கிறது

குடியுரிமை சட்ட எதிர்ப்பை முறியடிப்பது பற்றி பா.ஜனதா ஆலோசனை

நேற்று 15 ஆண்டு ஆகியும் மாறாத சுனாமி சோகம் - உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி

மோடி, ஆர்.எஸ்.எஸ்.சின் பிரதமர் - ராகுல்காந்தி கடும் தாக்கு

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஒருதலை காதலால் விபரீதம்: இளம்பெண் குத்திக்கொலை - ஆந்திர வாலிபர் கைது

நிதி நெருக்கடிக்கு மத்தியில் ரூ.268 கோடி பாக்கி: அரசு அமைப்புகளுக்கு இனி டிக்கெட் கிடையாது....ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் விவேகானந்தரின் கருத்துகளை பரப்ப வேண்டும் ஜனாதிபதி பேச்சு

மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை ரவீணா உட்பட 3 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டி அருகே பரிதாபம்: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து காவலாளி பலி

சித்தூர் அருகே பரிதாபம் கார் மீது பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி நிதான தொடக்கம் லபுஸ்சேன், சுமித் அரைசதம் அடித்தனர்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது

பெங்கால் வீரர்களின் ஓய்வறையில் இருந்து தேர்வு குழு உறுப்பினர் தேவங் காந்தி வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாதரில் வஞ்சித் பகுஜன் அகாடி ஆர்ப்பாட்டம் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 824 வாக்குச் சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: ‘ஆணவத்துடன் செயல்படும் அரசு வீழ்ந்து போகும்’ பா.ஜனதா மீது சிவசேனா கடும் தாக்கு

பின்னணிக் குரல் கலைஞா்கள் சங்க முறைகேடு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூர் :விவசாய கடன் தள்ளுபடி குறித்த பேனரில் கூட்டணி கட்சி தலைவர்கள் படம் இல்லாததால் தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி

“டெல்லி தேர்தலை தவறின்றி நடத்துங்கள்” - தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மைசூருவில் காங்கிரசார், முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

‘முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயம்’ - மத்திய அரசு

பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடின கர்நாடகத்தில் சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்து மகிழ்ந்தனர் கோவில்களில் நடைகள் சாத்தப்பட்டன

கர்நாடகாவின் ‘மகா திருமண’ திட்டம் - விளம்பர தூதர்களாக யஷ் - ராதிகா தம்பதி தேர்வு

பெங்களூருவில் மால்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

‘குடியுரிமை சட்டம் குறித்து காங்கிரஸ் குழப்பம் ஏற்படுத்துகிறது’ - அமித் ஷா குற்றச்சாட்டு

எந்த தியாகத்தையும் செய்ய தயார்; புதுச்சேரியில் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி

நீச்சல் பயிற்சி.. வாக்கிங்.. பொங்கலுக்கு சீறிப்பாய ரெடியாகும் ஜல்லிக்கட்டு காளைகள்

சூதாட்ட விடுதிகளை மக்கள் விரும்புகிறார்களா? - கவர்னர் கிரண்பெடி கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

புதுச்சேரியில் வளைய சூரிய கிரகணம் - ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டருக்கு ரூ.77.70 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.71.09 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages