தர்மபுரி மாவட்டத்தில் நாளை (30.12.2019) நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான உபகரணங்கள் கழுதைகளின் மீது ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது. - Agnipuratchi

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (30.12.2019) நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான உபகரணங்கள் கழுதைகளின் மீது ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது.

Share This

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (30.12.2019) நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான உபகரணங்கள் கழுதைகளின் மீது ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் மலை கிராம மக்களும் வாக்களிக்கும் வகையில் கழுதைகள் மூலம் வாக்கு செலுத்த தேவையான உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் மலைகிராமங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட வட்டுவன அள்ளி ஊராட்சியிலுள்ள மலைக்கிராமங்களான கோட்டூர் மலை, அலைகட்டு, ஏரிமலை, ஆகிய மூன்று மலைகிராமங்களில் இரண்டு இடங்களில் வாக்கு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது, இதற்கு தேவையான வாக்கு பதிவிற்கான உபகரணங்கள் ஐந்து கழுதைகள் மூலம் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றுள்ளனர்,

மலைகரிாமத்திற்கு தற்போது வரை சாலை வசதி இல்லை, போக்குவரத்து என்பதே நடந்தே செல்ல வேண்டிய நிலையே தற்போது வரை நீடிக்கிறது  வனப்பகுதியில் செங்குத்தாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று மலை கிராமங்களை சேர வேண்டியுள்ளது,  வாக்குபதிவு முடிந்தவுடன் மீண்டும் கழுதைகள் மூலம் பதிவான வாக்குகள் அடங்கிய உபகரணங்களுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது

மூன்று மலைக்கிராமங்களிலும் சேரத்து சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் தற்போது வரை இந்த மலைகிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு பதிவிற்கான உபகரணங்கள் கழுதைகள் மூலமே எடுத்துச்செல்லபடுவது குறிப்பிடதக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages