📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 டிசம்பர் - 31 செவ்வாய் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சிதிலம் - சிதைவு
➖➖➖➖➖➖➖➖➖➖
ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதி நீட்டிப்பு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் 3,000 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண நிதி நிறுத்திவைப்பு : உடனே வழங்க சங்க தலைவர்கள் வலியுறுத்தல்
திருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரைந்த பெண்கள்
வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் வாபஸ்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நேற்றிரவு அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் அஜித் பவார் துணை முதல்வரானார்: அசோக் சவான், ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோருக்கு கேபினட் பொறுப்பு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 78 சதவீத வாக்குப்பதிவு - நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை
ஆஸ்திரியா நாட்டில் ரூ.15 லட்சம் வாடகை வீட்டில் வசித்த இந்திய பெண் தூதர் திரும்ப அழைப்பு: அரசு நிதியை முறைகேடாக செலவிட்டதாக குற்றச்சாட்டு
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
2019ம் ஆண்டில் ஷீரடி சாய்பாபா கோயிலில் 278 கோடி காணிக்கை: 19 ஆயிரம் கிராம் தங்கம் ,..4 லட்சம் கிராம் வெள்ளியும் கிடைத்தது
சேலத்தில் 564 கோடி செலவில் கால்நடை பூங்கா அமைப்பு : அரசாணை வெளியீடு
மராட்டியத்தில் ஆதித்ய தாக்கரே உள்பட 36 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆனார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடும் கட்டுப்பாடுகள் சென்னையில் 368 இடங்களில் சோதனை
நடிகை சஞ்சனா மீது மானநஷ்ட வழக்கு: பெண் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் மனு
வடகொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் நடவடிக்கைகள் அவசியம்: கிம் ஜாங் அன் சொல்கிறார்
பிரியங்கா, பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்- மத்திய ரிசர்வ் போலீஸ் படை விளக்கம்
சென்னையில் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.. போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை..!
அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி
இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஓட்டலில் ஆபாச நடனத்துக்கு தடை
செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை
குடியுரிமை திருத்த சட்டத்தை எல்லா மாநிலங்களும் அமல்படுத்தியே தீர வேண்டும்: அர்ஜுன் ராம் மேக்வால்
புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை: காட்டுத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை
இருசக்கர வாகன பந்தயத்தை தடுக்க நடவடிக்கை - மருத்துவர் ராமதாஸ் யோசனை
பெலகாவியை சொந்தம் கொண்டாடுவதா? மராட்டிய அரசுக்கு எடியூரப்பா கண்டனம்
குடியுரிமை திருத்த சட்டத்தை வரவேற்று புத்தாண்டு அன்று போட்டி கோலம் - பாஜக மகளிரணி
டெல்லி அருகே பனிமூட்டத்தால் விபத்து: கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
ராமநாதபுரம்: கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்
சிறையில் இருந்து சசிகலா உறவினருக்கு எழுதிய கடிதம் - வருமான வரித்துறை தகவல்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி அருகே தேர்தல் தகராறில் பயங்கரம்: அ.தி.மு.க. தொண்டர் படுகொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு
சென்னை : கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனிமைப்படுத்த முயற்சி கி.வீரமணி பேட்டி
புதுடில்லி : பொதுத் துறை நிறுவனமான, எல்.ஐ.சி., கடந்த, 2018- – 19ம் நிதியாண்டுக்கான, ஈவுத் தொகையாக, 2,611 கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.
செந்துறையில் தேர்தல் பணிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை
சிந்தாதிரிப்பேட்டை : சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி, தெருவிளக்கு, மின் கம்பங்களில் விளம்பரங்கள் செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டின் கடைசி தரவரிசை: இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு
வடபழநி : புத்தாண்டு தினத்தன்று, வடபழநி முருகனை தரிசனம் செய்ய ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வருங்காலத்தில் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்: ஐ.சி.சி. பரிசீலனை
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட வடிவேலு, பின் மறுத்துவிட்டார். இதனால், தயாரிப்பாளர் அவர் மீது, சங்கத்தில் புகார் செய்ய, புது படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கு 8 பேர் தேர்வு
புதுடில்லி : 'பீஹாரில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விடஅதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தள துணைத் தலைவர்பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பெரிய பட நிறுவனம் தயாரிக்கிறது: “சந்திரமுகி-2’ படம் விரைவில் உருவாகும்” - பி.வாசு பேட்டி
சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் வால்டர் படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
ஸ்ரீநகர் : காஷ்மீர், எம்.எல்.ஏ., விடுதியில், ஐந்து மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட எதிர்கட்சி தலைவர்களில், ஐந்து பேர் மட்டும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
மந்திரி சபையில் இடம்பிடித்த இளம் மந்திரி ஆதித்ய தாக்கரே - கட்சியை போல ஆட்சியிலும் கை ஓங்குகிறது
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 23.43 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 24.14 லட்சம் கோடி ரூபாய் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காட்கோபரில் பரபரப்பு: தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட பெண் உடல் மீட்பு - போலீசார் விசாரணை
புதுடில்லி: ''கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில், 5,000 கி.மீ., வனப்பகுதி அதிகரித்துள்ளது; இது, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு ஏற்ப, கூடுதலாக, 250 - 300 கோடி டன், 'கார்பன் சின்க்' எனப்படும் 'கரிம வளம்' உருவாக்கத்திற்கு துணை புரிந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநில அரசுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கண்டனம் “ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது”
திருப்பூர் ஜவுளி ஆலையில் பணிபுரிந்து வரும் காஷ்மீர் பெண் பர்வீன் பாத்திமா குறித்து, பிரதமர் மோடி 'மான் கீ பாத்' உரையில் புகழ்ந்தார்.
பெங்களூருவில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை: முன்னாள் கூடைபந்து வீரர் உள்பட 6 பேர் கைது 4 துப்பாக்கிகள், 8 குண்டுகள் பறிமுதல்
கோல்கட்டா : பா.ஜ.,வை தனிமைப்படுத்த, அரசியல் கட்சிகள், மாணவர் சங்கங்கள் கைகோர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.12 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.71.86 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலின் இன்றைய விலை, இந்த ஆண்டின் உச்சபட்ச விலை ஆகும்.
கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழு தேர்தல் 3-வது முறையாக ஒத்திவைப்பு
கோவை:அடிக்கடி ஆம்னி பஸ், ேஷர் ஆட்டோக்களில் பயணம் செய்பவரா நீங்கள்...? அடுத்த வரியை படித்தால் இனி, ஆம்னி பஸ்சில் பயணம் செய்யவே மாட்டீர்கள்.... லைசென்ஸ் இல்லாமல் 440 பஸ் ஓட்டுனர்கள் பிடிபட்டுள்ளனர் என்பதுதான் அது! இனி எத்தனை பேர் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுகிறார்களோ?தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - போலீசார் தீவிர கண்காணிப்பு
திருப்பூர் ஒன்றியத்தில், 10 அறைகளில், 72 டேபிள்கள், 245 அலுவலர்களுடன், ஓட்டு எண்ணிக்கை மையம் தயாராகியுள்ளது.
பிரியங்கா காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பா.ஜ.க.வின் சர்வாதிகாரத்துக்கு மக்கள் சக்தி முடிவு கட்டும் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
பம்மல் : பம்மல் நகராட்சியில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் விதமாக, காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பையை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.பம்மல் நகராட்சி, 21 வார்டுகளை கொண்டது.
ஜிப்மரில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மத்திய சுகாதார மந்திரி தகவல்
ஆக்லாந்து: நியூஸிலாந்து ஒயிட்ஸ் தீவு எரிமலை குழம்பாக வெடித்து கிளம்பிய காட்சி சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த வைரல் வீடியோ போலியாக தயாரிக்கப்பட்டது என தற்போது தெரிந்த பின் சமூக வலைதள ஆர்வலர்கள் சற்று உஷார் நிலைக்கு மாறியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தம் செய்ய அவசர சட்டம் - நாளை முதல் அமல்
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment