தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 144வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டும் காவல்துறை பாதுகாப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து வருகின்றனர்
கர்நாடக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரின்வரத்து, கடந்த சில நாட்களாக பருவமழையின் தாக்கம் குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக இருந்து நிலையில் இன்று வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்தும் அருவியில் அமைக்கப்பட்ட தடுப்புவேலிகளின் சேதங்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 144வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கேரளா கர்நாடகா ஆந்திரா தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிந்து வருகின்றனர். காவல்துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் யாருமில்லை என்பதால் மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையை மீறி சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
செய்தியாளர் இன்பசேகர் தர்மபுரி
No comments:
Post a Comment