ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சிரோஹி மாவட்டத்திலுள்ள கிராமத்தில், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை தவறி விழுந்துள்ளது. தகவலறிந்ததும் உடனடியாக குழந்தையை மீட்கும் பணிகள் துவங்கப்பட்டன.
ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கிணற்றின் 15 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் குழந்தைக்கு, தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள மாவட்ட ஆட்சியர் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்து கொண்டிருக்கும் நிலையில், சம்பவ இடத்தில் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment