அக்னிப்புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்
*சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.77.81ஆகவும், டீசல் விலை மாற்றமில்லாமல் லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது.
*திருவள்ளூர், சென்னை, தஞ்சை, திருச்சி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
*பவானிசாகர் அணை நீர்மட்டம் - 105 அடி, நீர்இருப்பு - 32.7 டிஎம்சி, நீர்வரத்து - 568 கனஅடி, வெளியேற்றம் - 2,350 கனஅடி.
*ஆன்லைன் லாட்டரி - க 3 பேர் கைது:
நாகர்கோவில்: ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது - போலீசார் விசாரணை.
*'வெங்காயம் விலை உயர்வு':
*சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.5 உயர்ந்து ரூ.100க்கு விற்பனை.
சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.10 உயர்ந்து; ரூ.130க்கு விற்பனை.
*சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.28,976க்கு விற்பனை.
*உள்ளாட்சித் தேர்தலில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கேமரா சின்னம் ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம்.
*திமுகவினருக்கு ஸ்டாலின் கடிதம்:
தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினரை ஒருங்கிணைத்து, வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்றிடும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற வேண்டும்
அவசரக் கோலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த துடிக்கும் அதிமுக அரசுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினாலும், அதிமுக தோல்வியடையும் - ஸ்டாலின்.
*பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாளான இன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் - தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் அறிவிப்பு.
No comments:
Post a Comment