📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 டிசம்பர் - 14 சனி 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சிரம் - தலை
➖➖➖➖➖➖➖➖➖➖
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடர்ந்து நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுடில்லி : நடந்து முடிந்த பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில் லோக்சபா 116 சதவீதமும், ராஜ்யசபா 99 சதவீதம் செயல்பட்டுள்ளது.
டெல்லியின் முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
கோவை:'இடிந்து விழும் நிலையில், உள்ள எங்கள் வீடுகள் பிரச்னையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
கராச்சி: பாகிஸ்தான், கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னு பிரடிட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.இந்நிலையில், வழக்கம்போல சிங்கத்தின் கூண்டுக்கு அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளை சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்து சென்று அவரின் இடது கையை பிடித்து கடித்து குதறியது
சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை: புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில், கவர்னர் குறுக்கிட முடியாது என்ற உத்தரவை எதிர்த்த, மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கவர்னராக, கிரண்பேடி உள்ளார்.
குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு தகவல்
மதுரை'எய்ம்ஸ்': 3 மாதத்தில் சர்வதேச 'டெண்டர்'
நேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு
'நிர்பயா' குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது? வரும் 18 ல் முடிவு செய்கிறது டில்லி கோர்ட்
அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை
ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே ; நிர்மலா சீதாராமன்
அமெரிக்காவில் ‘ரிமோட்’ மூலம் இயங்கிய கார் மோதி வாலிபர் சாவு
பாலியல் வழக்குகளில் 14 நாளில் தண்டனை ஆந்திர சட்டசபையில் நிறைவேறியது மசோதா
பாகிஸ்தானில் பஸ் மீது வேன் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் பலி
கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியிடப்படும் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சஞ்சய் காந்தி நினைவிடத்தில் மேனகா, வருண் காந்தி அஞ்சலி
ஆற்றுமணலுக்கு பதில் எம் சாண்ட் பயன்படுத்தி சென்னை மாநகராட்சி திட்டங்களில் ரூ.1,000 கோடி ஊழல் உரிய விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்? - போலீசார் விளக்கம்
கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பா.ஜனதாவின் வீழ்ச்சிக்கு அடிகோலும்: துரைமுருகன்
பிப்ரவரி 5-ந் தேதி பெரியகோவில் கும்பாபிஷேகம்: அடுத்த மாதம் 27-ந் தேதி பூர்வாங்க பூஜை தொடக்கம் - கலெக்டர் தகவல்
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்
கடலூர் அருகே ரெட்டாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயித்து ஊர்க்கூட்டத்தில் தீர்மானம்!
பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்
புதுச்சேரி அருகே முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது: போலீசார் விசாரணை
கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை
வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை எதிரொலி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: பாஜ.வின் பதில் கோஷத்தால் பரபரப்பு
‘விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்’ - வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை
வங்கதேசம், பாக். எல்லை பாதுகாப்பில் சிறப்பு கவனம்: அமித்ஷா திடீர் ஆலோசனை
மராட்டியத்தில், குடியுரிமை சட்டத்தை காங்கிரஸ் அனுமதிக்காது - மந்திரி நிதின் ராவத் பரபரப்பு பேட்டி
சிவகாசி நகராட்சி பகுதியில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு அதிகரிப்பு : நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி: தமிழின ரெயில் பயணிகள் சங்கத்தினர் ரெயில்வே மந்திரியிடம் மனு
15 நாட்களுக்கு பின்னர் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி
வைத்தர்ணா ஏரியில் அமைகிறது: மாநகராட்சிக்கு சொந்தமாக நீர் மின் உற்பத்தி நிலையம் - உத்தவ் தாக்கரே அனுமதி வழங்கினார்
பொதுப்பணித்துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் ரூ.29 கோடியில் கட்டிட பணி : செயற்பொறியாளர் தகவல்
மந்திராலயாவில் பரபரப்பு: 6-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி
திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகதின் பல்வேறு இடங்களில் மிதமான மழை
கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை - ‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை’
ஐபிஎல் டி20 ஏலம் இறுதி பட்டியலில் 332 வீரர்கள்: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கிறது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவிடம் நலம் விசாரித்தார், ரமேஷ் ஜார்கிகோளி
தேசிய திறனாய்வு போட்டி நடைபெறும் நாளில் தேர்தல் பணிக்கான பயிற்சியை நடத்தக்கூடாது: கல்வித்துறை அலுவலர்கள் கோரிக்கை
பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: பல்கலைக்கழக மாணவர் உள்பட 3 பேர் கைது
இணையத்தில் வெளியானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கூறும் குயின் தொடர்
இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையா காரணமா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்
சரவண பவன் ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கி தந்த ஜீவஜோதி விரைவில் பாஜவில் ஐக்கியம்
புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 23-ந்தேதி புதுவை வருகை
கோயம்பேடு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை
குடியுரிமை திருத்த சட்ட நகல் எரிப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்
நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுக்கு ஜாமீன் மறுப்பு
புதுச்சேரி :புத்துணர்வு முகாமுக்கு செல்ல மணக்குள விநாயகர் கோவில் யானை தயார் - நாளை மறுநாள் அனுப்ப ஏற்பாடு
உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.. எதிரிகளை எதிர்க்கும் வல்லமை உண்டு.. லாலு
புதுச்சேரி கடல் வழியாக இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சியா? போலீசார் திடீர் சோதனை- பரபரப்பு
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு
No comments:
Post a Comment