அக்னிப்புரட்சியின் இன்றைய முக்கிய செய்திகள்
*வன்முறையின்போது மாணவர்களை பாதுகாப்பதற்காகவே ஜாமியா பல்கலை.யில் போலீஸ் நுழைந்ததாக தகவல்:
டிசம்பர் 15ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் பதவு செய்த எப்.ஐ.ஆரில் தகவல்.
*மாணவர்கள் போராட்டம் காரணமாக சென்னை மாநில கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
*”சந்திரயான் -3 திட்ட இயக்குநராக வீர முத்துவேல் நியமனம்"
சந்திரயான் 3 திட்டத்திற்கான திட்ட இயக்குநராக வீர முத்துவேல் நியமனம் - இஸ்ரோ அறிவிப்பு.
*தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம் - அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம். குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.
*புதுக்கோட்டை திருமயம் முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா, அவரது மகன் முரளிதரன் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கம் - திமுக தலைமை.*
*ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.10 லட்சம் கேட்பதாக, திமுக எம்எல்ஏ மீது புகார் அளித்த நிலையில் சுப்பையா நீக்கம்.
*ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில் வந்தது கண்டுபிடிப்பு:
மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது ;பல நாட்களாக கிடந்ததால் பார்சல் யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.
*திண்டுக்கல் அருகே வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து.
பிரியாணி விருந்துடன் பணப்பட்டுவாடா செய்வதாக புகார். செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வளர்மதி பிரியாணி வழங்கியதாக தகவல்.
தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை.காலையிலேயே பிரயாணி விருந்துக்காக கூடிய வாக்காளர்கள்."
*டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது:
தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், புதுச்சேரி சார்பில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு.
*நிர்பயா பாலியல் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனு தள்ளுபடி
அக்ஷய் குமார் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மீண்டும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
No comments:
Post a Comment