உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - Agnipuratchi

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Share This

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறைகள் செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து மற்ற மாவட்டங்களில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோதல் நடத்தலாம் என தீா்ப்பளித்தது.

அதன்படி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதற்காக அதிமுக வெளியிட்டுள்ள முதற்கட்ட பட்டியலில் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அதிமுகவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages