அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்
*நேற்று உரி எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் பாக். ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவம் ஒத்துக்கொண்டுள்ளது - இந்திய ராணுவம்.
*சூரிய கிரகணம் தெரிந்தது:
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஊட்டி, முழுமையாய்; வளைவு வடிவ சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை; நிலவு முழுமையாக மறைத்தது.
*தேர்தல் நடைபெறும் நாட்களில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு.
*குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் கூட்டணிக்கட்சிகளின் கூட்டம் - ஸ்டாலின்.
பேரணி நடத்தியதற்காக 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - ஸ்டாலின்.
*தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.- சென்னை வானிலை மையம்.
நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு.
18 பெரிய மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மத்திய அரசின் நிர்வாக சீர்த்திருத்தத்துறை பட்டியல் வெளியீடு. 5.63 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், மஹராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகியவை அதற்கடுத்த இடங்களை பெற்றுள்ளது.
*நீங்கா நினைவுகள் 15 ம் ஆண்டு.......
15 ஆண்டுகளுக்கு முன்பு கடலோரப் பகுதிகளை வாரிச் சுருட்டிய சுனாமி நினைவு தினம் இன்று.
ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிய சுனாமி ஏற்பட்ட 15வது ஆண்டு தினம் தமிழகம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீன் விற்பனை அங்காடிகளிலும் மூடப்பட்டுள்ளன. கடலோரப் பகுதிகள் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.
*நேற்று உரி எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் பாக். ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவம் ஒத்துக்கொண்டுள்ளது - இந்திய ராணுவம்.
*சூரிய கிரகணம் தெரிந்தது:*
*தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஊட்டி, முழுமையாய்; வளைவு வடிவ சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை நிலவு முழுமையாக மறைத்தது.
*தேர்தல் நடைபெறும் நாட்களில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தமிழக அரசு.
*குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் கூட்டணிக்கட்சிகளின் கூட்டம்
பேரணி நடத்தியதற்காக 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - ஸ்டாலின்.
*நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு.
18 பெரிய மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மத்திய அரசின் நிர்வாக சீர்த்திருத்தத்துறை பட்டியல் வெளியீடு. 5.63 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், மஹராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகியவை அதற்கடுத்த இடங்களை பெற்றுள்ளது.
*சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். கர்நாடகாவில் கல்புர்கி மற்றும் தும்கூர் மாவட்டங்களில் சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
*தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வுகளுக்கு விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு.
*புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரணி.
ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து 2,000க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணி; திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், இஸ்லாமியர்கள் பல்வேறு அமைப்புகள் பேரணியில் பங்கேற்பு.
*பெரம்பலூரில் மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கைது.
பெரம்பலூரில் சரவணன் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே இருந்த மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்புத்துறை கைது செய்தது.
*குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது.
19,500 சமூக வலைதள பதிவுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக உத்தரப்பிரதேச காவல்துறை தகவல்.
*கிராம ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்:
திருவண்ணாமலை : உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆவூர் கிராம ஊராட்சி செயலாளர் சுகுமார் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தடயவியல் அறிக்கை.
நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சிறுமியின் தாயார் வழக்கு.
*சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்.
சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இனி அது குறித்து ஸ்டாலின் பேசக்கூடாது விவசாயத்திலும் நாளை முதலிடத்திற்கு வருவோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, தொழில்துறையிலும் முதல் இடத்திற்கு வருவோம் - அமைச்சர் ஜெயக்குமார்.
*கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாயார் மனு.
சிறுமியை 2 பேர் வன்கொடுமை செய்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக தாயார் மனு.
சிறுமி கொலை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் தாயார் வழக்கு.
*சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து வழிபாடு செய்த கிராம மக்கள்.
கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். கர்நாடகாவில் கல்புர்கி மற்றும் தும்கூர் மாவட்டங்களில் சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
*தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக தேர்வுகளுக்கு விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு.
*புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் பேரணி.
ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து 2,000க்கும் மேற்பட்டோர் தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணி; திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், இஸ்லாமியர்கள் பல்வேறு அமைப்புகள் பேரணியில் பங்கேற்பு.
*பெரம்பலூரில் மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் கைது.
பெரம்பலூரில் சரவணன் என்பவரிடம் ரூ.1000 லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே இருந்த மின்கம்பியை மாற்றியமைக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்புத்துறை கைது செய்தது.
*குடியுரிமை சட்டம் தொடர்பான போராட்டத்தின் போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது. 19,500 சமூக வலைதள பதிவுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக உத்தரப்பிரதேச காவல்துறை தகவல்.
*அரசு அமைப்புகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்குவது நிறுத்தம்:
பல்வேறு அரசு அமைப்புகள் சுமார் ரூ.268 கோடிக்கு டிக்கெட் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளன; ஏற்கனவே கடனில் வழங்கிய டிக்கெட்டுகளுக்கு தொகையை செலுத்தாக வரை கடனில் புதிதாக டிக்கெட் வழங்கப்படாது.
- ஏர் இந்தியா.
*கிராம ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்:
திருவண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆவூர் கிராம ஊராட்சி செயலாளர் சுகுமார் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
No comments:
Post a Comment