தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ்
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்க இந்திய தொழில் முதலீட்டாளர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகின்றது என்று தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில், அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் நடந்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய ஓபிஎஸ் பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் தொழிற்பூங்கா தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மருத்துவ பூங்காக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் காலியாக இருக்கின்றது. அந்த இடங்களில் புதிய தொழில்களை துவங்கலாம் என தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் சூழலை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு தான் வருகின்றது.’ என்று அவர் தெரிவித்தார். புதிய தொழில்கள் விரைவாக துவங்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று இளைஞர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.
No comments:
Post a Comment