வாங்கிய கடனை கட்ட முடியாததால் கணவன்,மனைவி தற்கொலை! December 10, 2019 - Agnipuratchi

வாங்கிய கடனை கட்ட முடியாததால் கணவன்,மனைவி தற்கொலை! December 10, 2019

Share This

வாங்கிய கடனை கட்ட முடியாததால் கணவன்,மனைவி தற்கொலை!
December 10, 2019

சேலத்தில் மகளின் திருமணத்திற்காக வட்டிக்கு வாங்கிய கடனை கட்ட முடியாததால் பால் வியாபாரி, மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
சேலம் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மணி. பால் வியாபாரம் செய்து வரும் இவர் கந்து வட்டிக்கு  ரூ.5 லட்சம் கடன் வாங்கி தமது 2வது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் கடனை திருப்பி தரமுடியாததால், கடன் கொடுத்தவர்கள் மணியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மணியின் வீட்டை, கடன் கொடுத்தவர்கள் பூட்டி சாவியை எடுத்து சென்றதாகவும், பின்னர் பணத்தை தந்துவிடுவதாக கூறி மணி சாவியை திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. 
இந்நிலையில், இன்று காலை மணியின் வீடு நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டியே கிடந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து போது, மணியும் அவரது மனைவியும் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages