இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

இன்றைய முக்கிய செய்திகள்

Share This

இன்றைய முக்கிய செய்திகள்

* நாகையில் கடை அடைப்பு
நாகையில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை விரைவாக தொடங்கக்கோரி கடை அடைப்பு. 3 தாலுக்காவில் 10 ஆயிரம் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமலும் போராட்டம்.

*குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி  முடிவு.

*ஸ்பார்ட் ஃபைனில் முறைகேடு - எஸ்ஐ. சஸ்பெண்ட்:

சேலத்தில் வாகன ஓட்டிகளிடம் ஸ்பார்ட் ஃபைனில், முறைகேடு செய்த போக்குவரத்து எஸ்.ஐ. கோவிந்தராஜ் சஸ்பெண்ட்.எஸ்.ஐ. கோவிந்தராஜ் அன்பெய்டு என ரசீது வழங்கிவிட்டு ரூ.200 வாங்கிய வீடியோ வைரலானதால் நடவடிக்கை.

*‘தேசிய குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்’ திருத்துறைப்பூண்டியில் பாரதிதாசன் பல்கலை., உறுப்பு கல்லூரி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

*ஆபாச வீடியோ - முதல் கைது:

குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக தமிழகத்தில் முதல் கைது.சமூகவலைதளத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பகிர்ந்தவர் திருச்சியில் கைது.கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை போலீசார் விசாரணை.

* குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம்: உங்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது.அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும்.
- பிரதமர் மோடி.

* குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சூழலில் உச்சநீதிமன்றத்தில் மனு.

*  சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக கூறிய நிலையில் சந்திப்பு.

*  குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்த‌தாக கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் - திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு.

*  சென்னை: பூந்தமல்லியில், பார்வையற்றோர் பள்ளியில் நடிகர் விஜய் படப்பிடிப்பால் இடையூறு ஏற்பட்டதா? இடையூறு ஏற்பட்டதாக எழுந்த புகாரில், பள்ளி முதல்வரிடம்;  மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்பு.

* தெலங்கானா என்கவுன்ட்டர் - உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்"உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து. தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும்
- உச்சநீதிமன்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages