📰 நாளிதழ் செய்திகள்📰    🗓 டிசம்பர் - 12 வியாழன் 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰    🗓 டிசம்பர் - 12 வியாழன் 🗓

Share This

📰 நாளிதழ் செய்திகள்📰
   🗓 டிசம்பர் - 12 வியாழன் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்

சிகரம் - உச்சி; முகடு
➖➖➖➖➖➖➖➖➖➖

ஜார்க்கண்டில் 3-வது கட்ட தேர்தல்: 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுடில்லி : பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

‘பிரதமர் மோடிக்கு மாற்று, ராகுல் காந்தி மட்டுமே’அசோக் கெலாட் சொல்கிறார்

கடலுார்:சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் மனுத்தாக்கல் செய்ய திரண்டு வந்ததால் கடலுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் களை கட்டியது.

தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி தேர்தலை நடத்த உத்தரவிட்டு இருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, எகிப்து வெங்காயம் வந்த நிலையில், கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

‘5 ஆண்டுகளில் 50 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் ஏவப்படும்’ இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு

சென்னை : சி.பி.ராமசாமி அய்யர் இந்தியவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்க உள்ள கருத்தரங்கத்திற்கு, 'தமிழ் கல்வெட்டுகளில் அறிவியல் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண அடி கொடுத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தாம்பரம் : 'ரோட்டரி கிளப் ஆப் தாம்பரம் சென்ட்ரல்' அமைப்பின் சார்பில், மெகா வேலைவாய்ப்பு முகாம், ஸ்ரீசங்கரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், சமீபத்தில் நடந்தது. இதில், பதிவு செய்த, 2,060 பேரில், 1,421 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், 625 பேருக்கு வேலைவாய்ப்பு அனுமதி சான்று வழங்கப்பட்டது.

மக்களவையை போன்று கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிராக 105 பேரும் வாக்களித்தனர்.

சென்னை  திருவேற்காடு அருகே சுந்தர சோழவரத்தில் திருமணமாகி ஆறு மாதம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்று பெண் தூக்கிட்டு தற்கொலை

உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

டாக்கா : அமித்ஷா வங்கதேசத்தில் சில மாதங்கள் இருந்து பார்த்தால், எங்கள் நாடு மத நல்லிணைக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை காண்பார் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்” - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி

அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்

துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி

கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு

திருப்போரூர் அருகே, கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் பார் உரிமையாளரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய 5 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

கல்லூரி மாணவிகள் கூட்டத்துக்குள் மினி பஸ் புகுந்தது 12 பேர் படுகாயம்

திருவாரூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி

மயிலாடுத்துறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை

இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

கொல்கத்தாவில் இருந்து அசாமின் திபரூகர் நகருக்கு செல்லும் விமான சேவை நிறுத்தம்

பா.ஜனதா கட்சியில் சேரும்படி நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு

மாநிலங்களவையில் #CAB2019 நிறைவேற்றம்: நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள்...பிரதமர் மோடி டுவிட்

ரூ.800 கோடியில் தயாராகும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது

ஜார்க்கண்டில் 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: இளம் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்...பிரதமர் மோடி வேண்டுகோள்

பா.ஜனதாவும், சிவசேனாவும் மீண்டும் இணைய வேண்டும் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி

மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் ஜெயில் - பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் அடுத்த மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை அதிகாரி தகவல்

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பாவுடன் சந்திப்பு மந்திரிசபையில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்- அசாம் முதல்வர் வீட்டின் மீது கற்கள் வீச்சு

கர்நாடகத்தில் சாலை மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை- ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

வருகிற 31-ந் தேதி வரை காலக்கெடு பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம்பெற செய்வது கட்டாயம் பெங்களூரு மாநகராட்சி மேயர் கவுதம் குமார் தகவல்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், அதன் ஹிந்துத்துவா கொள்கைக்கு போட்டியாக, மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்களின் சிலைகளை நிறுவும் முயற்சியில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

நிதி மேலாண்மை தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் கிரண்பெடி வலியுறுத்தல்

புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.92காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை குறைந்தும் , டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages