அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*கரூர்: ராச்சாண்டார்திருமலை அருகே உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்த தலைமைக் காவலர் ஜான்சன் மாரடைப்பால் மரணம்.

*கடற்படை வீரர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை.
வீரர்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட வணிக வலைதளங்களையும் பயன்படுத்த கடற்படை தடை.

*குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் வீட்டுவாசலில் கோலம்.

வேண்டாம் CAA, NRC என மு.க.ஸ்டாலினின் வீட்டுவாசலில் கோலம் போடப்பட்டுள்ளது.

*தூத்துக்குடி : வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடி முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம். மீதமுள்ள அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

*சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை விசாரணைக்கு ஏற்றது, சிபிஐ

*முறைப்படி வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்

*வாக்கு எண்ணிக்கை - மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி.

*உயர்நீதிமன்றம் மதுரை கிளை: வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது?

*மாநில தேர்தல் ஆணையம்: குறைந்த கால அவகாசமே உள்ளதால் வீடியோ பதிவுக்கு வாய்ப்பில்லை.

*தமிழக காவல்துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.

*தேர்வர்கள் tnusrbonline.org இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

*காவல்துறையினருக்கு வரும் 11ம் தேதியும், பொது விண்ணப்பதார‌ர்களுக்கு 12ம் தேதியும் எஸ்.ஐ. தேர்வு நடைபெறுகிறது.

*ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்.

தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம்- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.

*புதுச்சேரி:காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட காவலர் ஆதவமூர்த்தி புதுச்சேரி போலீஸ் தலைமையக அலுவலகம் அருகே விஷம் குடித்து  தற்கொலை முயற்சி.

*முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்.
முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

*ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவை ஜனவரி 2ஆம் தேதி வெளியிட தடையில்லை- உயர்நீதிமன்றம்.

*உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

”உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குச் சீட்டும் வீடியோ பதிவு செய்யப்படும்"
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம்.

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும். தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி மூலம் கண்காணிக்க கோரிய வழக்கில் ஆணையம் விளக்கம்.

*சென்னையில் புத்தாண்டு தினத்தன்று 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் - சென்னை பெருநகர் காவல்துறை.

31ஆம் தேதி இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 368 வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படும் - காவல்துறை. மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிப்பு.

*ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.

27 மாவட்டங்களில் 255 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், 4,924 ஊராட்சிகளுக்கும், 38,916 ஊராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

*அனுமதியின்றி தி.மு.க. பேரணி - போலீசார் நடவடிக்கையை தொடரலாம் - உயர்நீதிமன்றம்.

ஸ்டாலின், கே.எஸ் அழகிரி, ப.சிதம்பரம்  உள்ளிட்ட 14,125 பேர் மீது வழக்குப் பதிவு - அரசுத்தரப்பு.
பேரணிக்கு தடை கோரிய  வழக்குகளை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

*சேலம் தலைவாசலில் நவீன கால்நடைப்பூங்கா அமைக்க ரூ.564.44 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.

தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பில் பண்ணை, உணவு பதப்படுத்துதல், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட அம்சங்களுடன் உலகத்தரம் வாய்ந்த நவீன கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளது.

*தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு - பள்ளிக் கல்வித் துறை.

3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த  நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு. வாக்கு எண்ணிக்கை 2ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் அரசு நடவடிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages