தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும் - உச்ச நீதிமன்றம். - Agnipuratchi

தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும் - உச்ச நீதிமன்றம்.

Share This

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் 8 வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியதும் தொகுதி வரையறை இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.  மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் - திமுக தரப்பு வாதம்.

மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர்யிடம் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? என - நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதை செய்ய வேண்டியதில்லை -  மாநில தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் பதிலளித்தார்
தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும் - தேர்தல் ஆணையம் பதில்.

ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும் ? ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - தலைமை நீதிபதி கேள்வி.

தொகுதி மறு வரையறை, இட ஒதுக்கீடு என எல்லா பணிகளும் நிறைவடைந்து விட்டது - மாநிலத் தேர்தல் ஆணையம்.

பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது" எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்?- என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வேண்டுமெனில் மாற்றம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் - தமிழக அரசு வாதம்.

நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது - உச்ச நீதிமன்றம்.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளி போட முடியாது - தமிழக அரசு.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளி போட முடியும்.

வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம்.
- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.

9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை ஒத்தி வைத்தால் குழப்பம் ஏற்படும். எனவே உள்ளாட்சி தேர்தலை தமிழகம் முழுக்க ஒத்தி வையுங்கள் - திமுக தரப்பு வாதம்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் -  மாநில தேர்தல் ஆணையம் வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நாளை அறிவிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages