📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 05 ஞாயிறு 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சீக்கிரமாக - சுருக்காக
➖➖➖➖➖➖➖➖➖➖
இருதரப்பு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்பட்ட புகாரில் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:ஈராக்கில், அமெரிக்கர்களுக்கு எதிராக, சமீபத்தில் நடந்த அனைத்து வன்முறை சம்பவங்களும், சுலைமானியின் மேற்பார்வையின் கீழ் நடந்தவை. இந்தியாவின் புதுடில்லியில் இருந்து, பிரிட்டனின் லண்டன் வரை நடந்த, அனைத்து பயங்கர வாத தாக்குதல்களிலும், சுலைமானியின் பங்கு நிச்சயம் உள்ளது. அவர் படுகொலை செய்யப்பட்டதன் மூலம், பயங்கரவாதத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
ஷீரடி:மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள சாய் பாபா கோவிலில், கடந்த மாதம் 23ல் இருந்து, கடந்த 2 வரை, 8.23 லட்சம் பேர், தரிசனம் செய்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
‘தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி கூறினார்.
கடலுார் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
குஜராத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு நடுவன் அரசு உறுதி அளித்துள்ளது.
பாக்தாத்: மேற்காசிய நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்தில், நேற்று முன்தினம் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவ தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்திற்கு முன் நடந்த தாக்குதலில், ஐந்து பேர் பலியாகினர்.
2 பெண்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில், சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி பெண் தலைவர் பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி - ஸ்டாலின் ; இந்திரா - ராஜிவ் - ராகுல்; சரத் பவார் - சுப்ரியா சூலே; உத்தவ் தாக்கரே - ஆதித்ய தாக்கரே... இப்படி வாரிசு அரசியல் வடக்கு, தெற்கு என, எல்லா திசைகளிலும் பரவியுள்ளது.மஹாராஷ்டிராவில் இந்த வாரிசு அரசியல் சற்று அதிகமாகவே உள்ளது.
குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க பிரியங்கா காந்தி மீரட் நகருக்கு செல்ல முயன்றபோது அவரை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
புதுடில்லி: டில்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக அலசப்படும் ஒரு விஷயம்-, 'மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இடையே உறவு சரியில்லையாமே...' என்பது தான். குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில், தொடரும் போராட்டங்களும், இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் அணுகவில்லை எனவும், இதனால் தான், மோடி - அமித் ஷா இடையே புகைச்சல் எனவும், அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது; 2 பேர் பலி
சென்னை : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் ஒன்றிய குழுத் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜன., 11ம் தேதி நடக்க உள்ளது. அப்பதவிகளை கைப்பற்ற ஆள்பிடிப்பு மற்றும் குதிரை பேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சியினர் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
பாரீஸ் புறநகரில் கத்திக்குத்தில் ஒருவர் பலி: தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை
புதுடில்லி : ஹவுரா - சென்னை உள்ளிட்ட, 100 வழித் தடங்களில், தனியார் நிறுவனங்கள் மூலம் ரயில்களை இயக்குவது குறித்து, ரயில்வே மற்றும் 'நிடி ஆயோக்' அமைப்பு சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 22 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தலைவர் சுலைமானிக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
அரசியலில் ரஜினி, கமல் சேர்ந்து செயல்பட்டால், மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்' என, ரஜினி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க படைகள் அழைப்பு
நீர் மின் நிலையங்களுக்கு அருகேயுள்ள அணைகளை புனரமைக்க, தமிழக மின் வாரியம், உலக வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் நிதி உதவி கோரியுள்ளது.
மியான்மர் நாட்டில் கார் மீது மோதிய பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தது: 22 பேர் உயிரிழப்பு
திருவொற்றியூர்:முதியவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கற்பை காப்பாற்றிக் கொள்ளவே, கொலை செய்ததாக, இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய காட்டுத்தீ : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
ராயப்பேட்டை:பகவான் யோகி ராம்சுரத்குமார், 101வது ஜெயந்தி விழா, விமரிசையாக துவங்கியது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடைகள் 10-ந்தேதி திறந்திருக்கும் தமிழக அரசு உத்தரவு
சிறுமியின் ஆபாச படத்தை முகநூலில் வெளியிட்ட இளைஞர் பொள்ளாச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்
கொடைக்கானலில் பயங்கரம்: கத்தியால் குத்தி பிரபல ரவுடி படுகொலை
கூடுவாஞ்சேரியில் பசுமைத் தாயகம் சார்பில் மாணவர்களுக்கு மருத்துவ குணம்கொண்ட மரக்கன்றுகள் வழங்கி நலவாழ்வு முறை குறித்து விளக்கப்பட்டது
கோபி அருகே, கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆந்திராவில் மகிழுந்து ஒன்று தடுப்புச்சுவரில் மோதி சாலையோர கால்வாயில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்
மதுரையில் காண்டிராக்டரிடம் துப்பாக்கி முனையில் 170 பவுன் நகை கொள்ளை
திருப்பத்தூரில் அதிக வட்டி கேட்டு ரமேஷ் என்பவரும், அவரது மகன் கோபி துன்புறுத்தியதாக பாரத் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் - கவுகாத்தியில் இன்று நடக்கிறது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நீராவி பட்டியில் சிவராமன் என்பவரின் 20 ஆடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். ஆடுகள் குடித்த தண்ணீரில் நஞ்சு கலந்திருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.சி.சி. போட்டிகளில் வெற்றி பெற மிடில் வரிசை வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் - கேப்டன் விராட்கோலி பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது பல்தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
‘தர்பார்’ படத்துக்கு வெளிநாட்டு கலைஞர்கள்: இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை இசை கலைஞர்கள் சங்கம் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் தென்னவராயன் நல்லூர் அருகே பாலகுடியைச் சேர்ந்த செல்லையனை, உருட்டுக்கட்டையால் அவரது மகன் சேகர் தாக்கியதால் உயிரிழந்தார். திருமணம் செய்து வைக்காததால் தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழாக்கோலம் பூண்டது ஸ்ரீரங்கம் நாளை பரமபதவாசல் திறப்பு
கொஞ்சமாக ஆசைப்படுங்கள்... கொஞ்சமாக வருத்தப்படுங்கள்... நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
வடகிழக்கு பருவமழையால் நிறுத்தப்பட்ட குடிமராமத்து பணிகளை மார்ச் 31க்குள் முடிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
கோவை விழாவில் ஒரு பகுதியாக இந்திய கடற்படை சார்பில் நடத்தப்பட்ட படகு காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
சூளைமேட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பெண் படுகாயம்
மராட்டியத்தில் புதிய மந்திரிகளுக்கு நாளைக்குள் இலாகா ஒதுக்கப்படும் - நவாப் மாலிக் பேட்டி
8 ஆண்டுகளாகியும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளால் சென்னை, புறநகரில் பாதியில் தொங்கும் மேம்பாலங்கள்: போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் மக்கள்
திருப்பூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேபினட் அந்தஸ்து கிடைக்காததால் சிவசேனா மந்திரி அப்துல் சத்தார் ராஜினாமா?
ரூ.1 கோடி பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீர சாவர்க்கருக்கு எதிரான புத்தகத்தை திரும்ப பெறுங்கள் - காங்கிரசுக்கு, தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
ராஜஸ்தான் முதல்-மந்திரியை பதவிநீக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு: கோலாரில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - தடையை மீறி சென்றதால் நடவடிக்கை
மத அடிப்படையில் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது - ராம்விலாஸ் பஸ்வான் உறுதி
கூட்டுறவு நிறுவனங்கள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டும் கவர்னர் கிரண்பெடி உத்தரவு
“கவர்ச்சி நடன மங்கை ஆக விரும்பினேன்” - ஜெனிபர் லோபஸ் ருசிகர பேட்டி
திருக்கனூர் அருகே சவுக்கு தோப்பில் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக 48 புதிய அரசு வக்கீல்களை நியமித்து தமிழக அரசு ஆணை
திருக்கனூர் அருகே சவுக்கு தோப்பில் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு
ஓராண்டில் ரூ.3.88 கோடி அபராதம் வசூல்: பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
கடற்கரை காந்தி திடலில் அகில உலக யோகா திருவிழா நாராயணசாமி தொடங்கி வைத்தார்
சிஏடி தேர்வு முடிவு வெளியீடு தமிழக மாணவன் உட்பட 10 பேர் 100% மதிப்பெண்
சென்னையில் இன்று (ஜன.,05) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.48 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.39 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment