ஜனவரி - 12, தேசிய இளைஞர் தினம்: இளைஞர்களுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி வாழ்த்துக்கள்.
ஜனவரி 12 இன்று விவேகானந்தர் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இளைஞர் சக்தி அளவிட முடியாத ஆக்க சத்தி என்று இளைஞர்களின் ஊக்க சத்தியாக உந்து சக்தியாக விளங்கியவர் விவேகானந்தர். நாட்டுப் பற்றையும், சேவை நோக்கத்தையும், நற்சிந்தனைகளையும், நேர்மையையும், நன்னெறிகளையும், வீரத்தையும், விவேகத்தையும், உரக்கச் சொன்னவர்.
எழுமின்; விழிமின்,கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்றும் இளைஞர்களே! உன்னால் முடியும், உன்னால் முடியும் நாட்டை உயர்த்த என்று நம்பிக்கையை உருவாக்கியவர்.
இளைஞர்கள் வீரமும், விவேகமும், நாட்டுப்பற்றும் சேவை நோக்கம் கொண்டு உழைத்து இளைஞர்களை நீங்கலும் உயர வேண்டும், உங்களால் உங்கள் குடும்பமும், நாடு உயர வேண்டுமென்று இந்நாளில் இளைஞர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment