📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 24 வெள்ளி 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுத்தம் - தூய்மை
➖➖➖➖➖➖➖➖➖➖
99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல்
இந்தியாவின் எதிர்காலத்தை இளைய சமுதாயம்தான் தீர்மானிக்கும் என கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த நேதாஜி சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
குரூப் 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம். இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறு, கடலில் பொதுமக்கள் புனித நீராடல்
பிப்ரவரி 1-ந் தேதி தூக்கில் போடப்பட இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன? என்று திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.
முன்கூட்டியே விடுதலை பெற ஆட்கொணர்வு மனுவை பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கு சவால் விடுத்த விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவை விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி ‘போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதே வழக்கமாக கொண்டு உள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொருளாதாரம் மீண்டு எழும் என்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பியூஸ் கோயல் பேசினார்.
அரசு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் பரிசீலனை: பேரவையில் விவாதிக்க முடிவு
சிரியாவில் பயங்கரம்: ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 40 வீரர்கள் பலி
ராஞ்சி : ஜார்கண்டில் விஷ்வ இந்து பரிஷித் நடத்திய பேரணியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, வன்முறை வெடித்தது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் தீயணைப்பு விமானம் விழுந்து நொறுங்கியது - அமெரிக்கர்கள் 3 பேர் பலி
புதுடில்லி : ப.சிதம்பரம் ஒரு திருடன் எனவும், அவரின் நம்பத்தன்மை குறித்து அனைவரும் அறிவார்கள் எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு - அமெரிக்கா முடிவு
ஹெப்சிபா: அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான வழக்கு 2 வாரம் ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
மங்களூரு விமான நிலைய வெடிகுண்டு வழக்கு கைதான என்ஜினீயருக்கு 10 நாள் போலீஸ் காவல் போலீசார் தீவிர விசாரணை
பல விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் சிறுக சிறுக மத்திய அரசிடம் சென்று கொண்டிருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தினவிழா கடலோர காவல் படை அணிவகுப்பை வழிநடத்தும் தமிழக பெண் அதிகாரி 28 வயது உதவி கமாண்டன்ட் தேவிகா
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
‘இந்தியாவின் எதிர்காலத்தை இளைய சமுதாயம்தான் தீர்மானிக்கும்’ நேதாஜி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார்..,
கடம்பூரில், ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த மீன் வியாபாரி பலி - தலை துண்டான பரிதாபம்
கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்: அமைச்சர் ஜெயக்குமாரின் நற்சான்று எனக்கு தேவை இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர்தான் ரஜினிகாந்த் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 6 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் - முதலமைச்சர்
கருமந்துறை அருகே, குடிபோதையில் கிணற்றில் தவறிவிழுந்து 2 விவசாயிகள் பலி
வடகலை.. தென்கலை... கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி லாந்தில் இன்று நடக்கிறது
இந்தியாவில் உள்ள உறவினர்களை சந்திக்க முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு சரத்பவார் குற்றச்சாட்டு
சம்பள உயர்வு கோரி பெங்களூருவில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெற்றனர்
காஞ்சிபுரத்தில் சாலைவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம்; பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை
ஜனாதிபதி உத்தரவு வரும்வரை ரோடியர் மில்லில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் - கவர்னர் கிரண்பெடிக்கு நாராயணசாமி கடிதம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.31 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.71.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment