அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

*கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் நகரத்தில் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உள்ளூர்வாசிகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வுஹான் நகரத்தில் இருந்து வெளிச்செல்லும் விமானங்களையும் ரயில்களையும் நிறுத்துவதாகவும் சீன அரசு அறிவிப்பு.

*ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. இது நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசை அறிவிக்கும் அபாய ஒலி - ப.சிதம்பரம்.

*ஆசிரியர்கள் இன்றி காலியாக இருந்த 1700 பணியிடங்கள் நிரப்பப்படாது:

பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையால் பட்டதாரிகள் அதிர்ச்சி. 1700 உபரி பணியிடங்களை திரும்ப பெறப்பட்டதாக அறிவிப்பு.

எதிர்க்காலங்களில் காலி பணியிடங்களாகவோ, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருத கூடாது.

*உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு:

தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு:

முகமது அலி, முகமது அமீர், பிச்சைக்கனி, ஷேக் தாவுத் ஆகியோர் மீது வழக்கு. ராமநாதபுரத்தில் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

*சாலையில்  தரையிறங்கிய விமானம்.

உத்திரபிரதேச மாநிலம் காழியாபாத் அருகே  தொழிநுட்ப கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் விமானம் தரையிறங்கியது.

*நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கு 'டெத் வாரண்ட்' பிறப்பித்த டெல்லி கீழமை நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்சநீதிமன்றத்தின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம்.

*நாகூர் ஆண்டவர் தர்ஹாவின் 463-வது ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

14 நாட்கள் அதிவிமர்சையாக நடைபெறும் கந்தூரி விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று அதிகாலை தர்ஹாவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது.

*போலி செய்தியாளர்கள் கைது.

ஈரோடு: காவல்துறையினரை மிரட்டி வந்த அரசு அங்கீகாரம் இல்லாத போலி பத்திரிக்கை நிருபர்கள் 2 பேர் கைது.

*புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பெண் தாதா எழிலரசி திடீர் கைது இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

*தேனி மாவட்ட ஆவின் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

*சென்னை பாரிமுனையில் காவலர் மீது காரை ஏற்றிய 2 பேர் கைது.

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க சொன்னதால் ஆத்திரம். காயமடைந்த காவலர் செந்தில்குமார் மருத்துமனையில் அனுமதி.

*பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

குடியரசு தின விழாவை அனைத்து பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் கொடியேற்றி சிறப்பாகக் கொண்டாட உத்தரவு.

மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது அனைத்து கல்வி அதிகாரிகள், பணியாளர்களும் குடியரசு தின விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றுவது, கிழிந்த கொடிகளை ஏற்றுவது, பிளாஸ்டிக் கொடிகளைப் பயன்படுத்துதல் கூடாது. பள்ளி வளாகங்கள், கல்வி நிலைய வளாகங்களை சிறப்பான முறையில் அலங்கரிக்க வேண்டும்.

*எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் பறிமுதல்.

வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மீட்பு.
எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் ஓடையில் கிடந்தது.

கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கி மீட்பு.
களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ம்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார், வில்சன்.

*ஹெச்.ராஜா மீதான  வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது வழக்கு.

*ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கூடுதலாக 550 படுக்கை வசதிகளுடன் செயல்பட உள்ளது.

நவீன மருத்துவ உபரகரணங்கள் மற்றும் அறுவைசிகிச்சை மையங்களுடன் செயல்படும் -  அமைச்சர் விஜயபாஸ்கர்.

*டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதலீடு மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் பழனிசாமி.

தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன சுத்திகரிப்பு ஆலை மூலம் தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் - முதலமைச்சர்.

*தாமிரபரணி மாசு அடைவதை தடுக்க நெல்லை ஆட்சியர் அடங்கிய குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு:

தாமிரபரணியை மறு சீரமைப்பு செய்ய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - பசுமைத் தீர்ப்பாயம்.

*பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - அடிதடி வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை.

ஆதாரம் இல்லாததால் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல். கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல். அடுத்த மாதம் 6 ஆம் தேதி இறுதி விசாரணை - அன்று  தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்பு.
பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட  வழக்கு முடித்துவைப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages