திருக்குறளில் காதல் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா அவர்களின் திருமணத்தை (27.01.2020) காலை மருத்துவர் இராமதாசு அய்யா நடத்தி வைத்து ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி! - Agnipuratchi

திருக்குறளில் காதல் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா அவர்களின் திருமணத்தை (27.01.2020) காலை மருத்துவர் இராமதாசு அய்யா நடத்தி வைத்து ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி!

Share This

திருக்குறளில் காதல் பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா அவர்களின் திருமணத்தை (27.01.2020) காலை மருத்துவர் இராமதாசு அய்யா  நடத்தி வைத்து ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி!

அதிகாரம் : களவியல், 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும்  வேபாக் கறிந்து .
காதலி சொல்லும் வகையில் இந்த குறள் எழுதப்பட்டுள்ளது. ‘’ நான் என் காதலனை எனது நெஞ்சுக்குள் வைத்து பாதுகாக்கிறேன். சூடான பொருளை நான் உண்டால் அது என் நெஞ்சுக்குள் இருக்கும் காதலரை சுட்டு விடும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறேன்”” என்று காதலி சொல்வதாக இந்தக் குறள் வடிக்கப்பட்டுள்ளது.
----------------------------------
அதிகாரம் : களவியல், 1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
தலைவனை பிரிய மறுக்கும் தலைவி கூறுவதாக இந்த குறள் உள்ளது.
‘’ நீ என்னை பிரிந்து செல்லாமல் இருப்பதற்கு ஏதேனும் வழி இருந்தால் அதை சொல். மாறாக நீ பிரிந்து சென்று விட்டு, விரைந்து திரும்பி வருவதை பற்றி சொல்வாய் என்றால், அதை இப்போது என்னிடம் சொல்லாதே. நீ திரும்பி வரும் போது உயிருடன் இருந்தால் சொல்”” என்பதே இதன் பொருள் ஆகும்.
-----------------------------------
அதிகாரம் : புணர்ச்சி விதும்பல், 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
பொருள்: மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா அவர்களின் புதல்வர் மருத்துவர் ம.நிதர்ஷ பிரகாஷ், மருத்துவர் ஏ. காயத்ரி இணையரின் (காதல்)திருமணத்தை நேற்று முன்நாள் (27.01.2020) காலை நடத்தி வைத்து ஆற்றிய உரையின் நிறைவுப் பகுதி!

(முற்றும்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages