📰 நாளிதழ் செய்திகள்📰
🗓 சனவரி - 29 புதன் 🗓
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்ச்சொல் அறிவோம்
சுபம் - நன்மை
➖➖➖➖➖➖➖➖➖➖
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை: அமைச்சரவையின் ஒப்புதலுடன் விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு
8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு - பள்ளிக்கல்வி துறை உத்தரவு
CAA-ல் அரசுக்கு எதிராக கருத்து: ஆளுநர் உரை நிகழ்த்த எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு...கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி
கரீபியன் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை: அமைச்சரவையின் ஒப்புதலுடன் விரைவில் அமைக்க மத்திய அரசு முடிவு
முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. ஆட்சி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்து உள்ளது.
வௌிநாட்டு சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதியை சரி செய்யவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தது: என்சிசி மாணவர்களிடையே பிரதமர் பேச்சு
குரூப்-4 தேர்வு ரத்து ஆகுமா? மோசடி தொடர்பாக மேலும் 2 பேர் கைது
அவசரநிலை பிரகடனம் போன்று சிஏஏ.க்கு தொடர்ந்து எதிர்ப்பு: சீதாராம் யெச்சூரி டிவிட்
பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறப்பு
பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன் நகை, ரூ.40,000 கொள்ளை
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 50 வகையான ஆவணங்கள் பறிமுதல்
எல்லா மாநிலங்களுடனும் இணைந்து செயல்பட விரும்புகிறோம்: அமித்ஷா கருத்து
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்பட 5 பேருக்கு 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு கோர்ட்டுக்கு மாற்றம்
அமைதியான நாடு என்ற இந்தியாவின் பெருமையை மோடி அழித்துவிட்டார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தமிழகத்தில் ரூ.84 கோடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி துவக்கி வைத்தார் அசைத்து முதல்வர் பழனிசாமி
கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு: ‘நிர்பயா’ குற்றவாளி வழக்கில் இன்று தீர்ப்பு; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
செல்பி எடுக்க முயன்ற ரசிகர்; செல்போனை பிடுங்கி சென்ற சல்மான் கான்
சி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.30 கோடி மதிப்பில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சென்னை: திருவேற்காட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது: கனிமொழி
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி ‘வார்டு’
பொதுத்தேர்வு வினாக்கள் எப்படி கேட்கப்படும்? அரசு தேர்வுத்துறை விளக்கம்
தூத்துக்குடியில் பயங்கரம், ஏ.சி. மெக்கானிக் படுகொலை; மேலும் 2 பேருக்கு கத்திக்குத்து - தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது
திருச்சியில் கொல்லப்பட்ட விஜயரகு குடும்பத்திற்கு பாஜக ரூ.50 ஆயிரம் நிதியுதவி
தஞ்சை பெரியகோவிலில் 5-ந் தேதி கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
புதுடில்லி: சி.பி.எஸ்.இ., தேர்வில் ராணுவ வீரர் மற்றும் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்கைளுக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்கி உள்ளது.
தாம்பரம் நகராட்சி திருமண மண்டபத்தில் ஒரே நாளில் 2 திருமணத்துக்கு பதிவு செய்ததால் குளறுபடி
சென்னை: வாக்காளர்கள் பெயருடன் 'ஆதார்' எண்களை இணைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றும் தீவிர முனைப்பில் இந்தியா: 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
ரஜினி படத்தில் வில்லியாக குஷ்பு?
சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘பைக் ரேஸ்’
புதுடில்லி : 'கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கான அனுமதி மறுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, 10 நாட்கள் மட்டுமே விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் கறாராக கூறியுள்ளது.
நாசிக் அருகே பயங்கர விபத்து: மோதிய வேகத்தில் பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்தன 20 பயணிகள் பரிதாப சாவு - 15 பேர் படுகாயத்துடன் மீட்பு
மும்பை: 'மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, 500 சதுர அடி வீடு கட்டித்தரப்படும் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அளித்த தேர்தல் வாக்குறுதி, சரிவர நடைமுறைபடுத்தப்படவில்லை' என, அக்கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா கவலை தெரிவித்துள்ளார்.
3 கட்சிகளின் ஆட்சி தொடர உத்தவ் தாக்கரேக்கு சோனியா விதித்த நிபந்தனை அசோக் சவான் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
டில்லியில் அனல் பறக்கும் பிரசாரம்; பா.ஜ.,- ஆம் ஆத்மி - காங்., மோதல்
மும்பை :காதலை சேர்த்து வைப்பதாக ஆன்லைனில் வலைவிரித்து பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்
'சீனாவில் இந்தியர்களுக்கு உதவ தயார்': தமிழக அரசுக்கு இந்திய தூதரக அதிகாரி கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி மும்பை, புனேயில் 6 பேருக்கு மருத்துவ கண்காணிப்பு
பெங்களூரு நகர்-புறநகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நில உரிமை பத்திரம் முதல்-மந்திரி எடியூரப்பா வழங்கினார்
எடியூரப்பா-பா.ஜனதா மேலிடம் பிடிவாதம் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தில் காலதாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள்
சென்னை: பிரதமரின் உதவித்தொகையை, 38 லட்சம் விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கான நடவடிக்கையை, வேளாண் துறை துவங்கியுள்ளது.
என்னை கேலி செய்து படத்தை வெளியிட்ட பா.ஜனதாவினர் கோழைகள் குமாரசாமி கடும் விமர்சனம்
கராச்சி:பாகிஸ்தானில் ஹிந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12-ந்தேதி சிறப்பு சட்டசபை கூட்டம் பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம்
சென்னை : ''பெண்கள் மற்றவர்கள் ஏற்றும் மெழுகுவர்த்தி போல் இல்லாமல், சூரிய ஒளி போல பிரகாசிக்க வேண்டும்,'' என, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துவக்க விழாவில், மாதா அமிர்தானந்தமயி பேசினார்.
புதுச்சேரி தேர்தல் ஆணையர் நியமனத்தை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு கிரண்பெடிக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
திருப்பூர்:ஸ்மார்ட்' அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமில் நேற்று, 920 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரி:பெரிய மார்க்கெட்டில் நடைபாதையை சீரமைக்காவிட்டால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவேன் சிவா எம்.எல்.ஏ. எச்சரிக்கை
திருவனந்தபுரம்: சட்டசபையில் இடம்பெறும் தனது உரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகத்தை படிக்க மாட்டேன் என கேரள கவனர்னர் ஆரிப் கான் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு வந்த அவரை உள்ளே விடாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’
சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.44 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.33 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிப்புரட்சி செய்தி பிரிவு P.சுரேஷ்
No comments:
Post a Comment